MGR முதல் விஜய் வரை துரத்தும் அரசியல் ஆசை… ஆனால் இதெற்கெல்லாம் விதை போட்டது ஒரு பெண் நடிகர்தான் என்றால் நம்ப முடிகிறதா?

By vinoth on ஐப்பசி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் தனித்தனியாக எப்போதும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு இன்றுவரை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலந்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை ஐந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் வி என் ஜானகி என இதுவரை ஐந்து முதல்வர்கள் கிடைத்துள்ளனர்.

இந்த வரிசை இப்போது விஜய் வரை வந்து நிற்கிறது. விஜய் சமீபத்தில் கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். இப்படி பலர் தமிழக அரசியலில் பல திரைக்கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்தது யார் என்று தெரியுமா?

   

K B Sundaraambaal with MGR

   

அவர் யார் என்பது பலரும் அறியாத தகவல். தமிழ் சினிமாவில் தன்னுடைய கந்தர்வக் குரலால் மயக்கிய மறைந்த நடிகை கே பி சுந்தராம்பாள்தான் அது. இவர் காங்கிரஸ் சார்பாக 1958 ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராக அனுப்பி வைக்கப்பட்டார். இது தேர்தலில் நின்று வெற்றி பெற்று செல்லும் எம் எல் ஏ பதவியில்லை. MLC என சொல்லப்படும் கட்சிகளால் தேர்வு செய்யப்படும் பதவியாகும்.

 

கே பி சுந்தராம்பாள் தன்னுடைய இளமைக் காலம் முதலே காங்கிரஸ் கட்சியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். கதர் ஆடை அணிதல், சத்யாகிரகத்தில் பங்கேற்றல், தேசிய விடுதலை போராட்டத்தில் பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்தல் என தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் கணவர் கிட்டப்பாவும் ஒரு தேசிய வாதிதான். அதனால்தான் இவருக்கு சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்தது.

K B Sundaraambaal in congress meeting

ஆனால் ஒரு கட்டத்தில் திராவிட அரசியல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த போது காங்கிரஸ் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அப்போது சுந்தராம்பாள் தீவிர அரசியலில் இருந்து விலகி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினார். அது மட்டுமில்லாமல் காங்கிரஸ் தலைவர்களான காமராஜர் உள்ளிட்டோர் சினிமாக் கலைஞர்களை திமுக பயன்படுத்தியது போல அதிகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.  பிஸியான நடிகராக வலம் வந்த இவர் 1980 ஆம் ஆண்டு தன்னுடைய 71 ஆவது வயதில் காலமானார்.