பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போட்டியாளர்களின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றை கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபி கிடைக்கும் என விஜய் சேதுபதி வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இந்த முறை சரிசமமாக ஒன்பது பெண் போட்டியாளர்களும் 9 ஆண் போட்டியாளர்களும் வந்துள்ளனர்.

முதல் நாளை வீட்டுக்கு நடுவே கோடு போட்டு ஆண்கள் ஒருபுறம் பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என முடிவெடுக்க பட்டதாக தெரிகிறது. இந்த முறை விஜய் சேதுபதி 24 மணி நேரத்தில் ஒரு நபர் எலிமினேட் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே எலிமினேஷன் ஆக என போட்டியாளர்களும் ஆடியன்ஸும் அதிர்ச்சியானார்கள். ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளனர்.

தாங்கள் உங்களுக்கு வசதிகளுடன் கூடிய வீட்டில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு வாரம் பெண்கள் யாரும் ஆண்களை நாமினேட் செய்யக் கூடாது என கூறியதாக தெரிகிறது. அதற்கு பெண்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர் அந்த நிபந்தனை நேற்று முதல் பயன்படுத்தியுள்ளனர் அதன் அடிப்படையில் தான் பெண் போட்டியாளர் ஒருவரை எலிமினேட் செய்துள்ளனர். அது மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா தான் என செய்திகள் உலா வருகிறது.
