தமிழில் டிவி சேனல்களில் செய்தி வாசித்து பிரபலமானவர்தான் மீரா கிருஷ்ணன். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சில சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பொதுவாகவே சில நடிகைகளை பார்க்கும் போதே பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு பந்தம் உருவாகும். அப்படிதான் நடிகை மீரா கிருஷ்ணனையும் பார்க்கும் பலருக்கும் அவர் பரிச்சயமானவர் போல இருப்பார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் வீணை வழியாக பல பாடல்களை வாசித்து பலரின் மனதை கவர்ந்தவர். ஐயப்ப பக்தி பாடல்கள் பாடும் ஒரு பாடகரின் மருமகள் தான் இவர்.

மீரா கிருஷ்ணன் அவருடைய வீட்டிலும் சரி அவருடைய கணவர் வீட்டிலும் சரி இசை பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் பல கல்யாண கச்சேரி மற்றும் கோவில் திருவிழாக்கள் போன்ற பல இடங்களில் வீணை வாசித்துள்ளார். இவர் எத்தனையோ நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தாலும் தனுசுக்கு அம்மாவாக நடித்தது தான் தனக்கு பெயர் அல்லது பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்று சொல்லி இருக்கிறார். படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக இவர் நடித்திருப்பார். அதனைப் போலவே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் அமலாபாலின் அம்மாவாகவும் இவர் நடித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவரை வீணை மீரா கிருஷ்ணன் என்று தான் பலர் அழைக்கின்றனர். ஆனால் அவர் நடித்த ஒரே ஒரு திரைப்படக் காட்சிதான் அவரா இவர் என்று ரசிகர்களை வியக்க வைத்தது. அதாவது தடம் திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் மீரா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் மீரா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் என்னோட வாழ்க்கையில எந்த ஒரு பெண்ணை பார்த்து பொறாமைப்பட்டது கிடையாது. நான் பார்த்து பொறாமைப்பட்ட ஒருவர் p. சுசிலா மட்டுமே. அதுவும் அவருடைய குரல் மீது தான் எனக்கு பொறாமை. அவருடைய பாட்டுக்கு நான் ஒரு அடிமை. அடுத்த ஒரு ஜென்மம் இன்று இருந்தால் அவருடைய மகளாக பிறக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவராகவே நான் பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த அளவிற்கு அவருடைய இசை என்னை கட்டிப்போட்டு விட்டது என்று பேசியுள்ளார்.
