இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தை விரும்பும் இளைஞர்கள் மிகவும் குறைவு. இளைஞர்கள் அனைவரும் விவசாயத்தை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டால் வரும் சந்ததியினர் உணவு பஞ்சம் இல்லாமல் சத்தான உணவுகளை உண்ண முடியும். தென்னிந்தியாவை காட்டிலும் வடநாட்டில் இளைஞர்கள் விவசாயத்தை புதுவித அணுகுமுறையை கொண்டு அதை மேம்படுத்தி சிறப்பாக செய்து வருகின்றனர். அப்படி மாட்டினைக் கொண்டு பால் வியாபாரம் மட்டுமல்லாது மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சாதித்திருக்கிறார் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் அவரைப் பற்றி இனி காண்போம்.
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அமர் பிரீத் சிங் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து பின்னர் பி டெக் படித்து முடித்தார். பிரபலமான பால் நிறுவனங்களான நெஸ்ட்லே மற்றும் அமுல் நிறுவனங்களில் பணியாற்றி பால் ஆட்டோமேஷன் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.

அமர் பிரீத் சிங் குடும்பம் itcக்காக கோதுமை மற்றும் அரிசியை 20 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறது. அதனால் விவசாயம் மற்றும் மாடு சார்ந்தவைகளில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அப்படி 2015 ஆம் ஆண்டு கௌ ஆர்கானிக் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
50 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட்ட கௌ ஆர்கானிக்ஸ் மதிப்பு கூட்டப்பட்ட பயிர்கள் விவசாயிகளின் விலை பொருட்களை நியாயமாக விற்க ஊடகத்தை நாடி விளம்பரம் செய்தார். பயிர்கள் கூடவே மாட்டுப் பண்ணை வைத்து கௌ ஆர்கானிக் என்ற பெயரில் சில்லரை விற்பனையை செய்வதற்கு கவனம் செலுத்தினர். அமர் பிரீத் சிங் கொரோனா காலகட்டம் வந்தபோது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது இவரது நிறுவனம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. கௌ ஆர்கனிக்ஸ் கீழ் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
அதற்கு அடுத்த கட்டமாக அமர் ப்ரீத் சிங் மாட்டு சாணத்தை வைத்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்தார். அப்படி அமர் ப்ரீத் சிங் மற்றும் அவரது குழுவினர் மீத்தேன் மூலம் செயல்படும் மின்சார ஜெனரேட்டரை உருவாக்கி இருக்கின்றனர். இந்த ஜெனரேட்டரை அவர்கள் பண்ணையில் பயன்படுத்துவதற்கும் பிற வணிக செயல்முறைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தினால் தங்களது பண்ணையில் இருந்து வரும் மின்சார கட்டணத்தில் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை சேமிக்க முடிகிறது என்று கூறி இருக்கிறார் அமர் ப்ரீத் சிங்.

10 பேர் கொண்ட குழுவில் ஆரம்பித்த கௌ ஆர்கனிக்ஸ் தற்போது 60 முதல் 70 பேர் வரை கொண்ட பங்குதாரர்களையும் விவசாயிகளையும் கொண்ட முழு அளவு வணிகமாக மாறி இருக்கிறது கௌ ஆர்கானிக்ஸ். தினமும் சுமார் 4500 பேருக்கு சேவை செய்கிறது. இவரது சிறந்த விற்பனை கிர் பசு நெய் ஆகும். இது மட்டுமல்லாமல் இவர்களின் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முறையான திட்டமிடல், விடாமுயற்சி மற்றும் செயல்பாடு இருந்தால் யாரும் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணமாக அமர் ப்ரீத் சிங் இருக்கிறார்.
