தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க ஒரு கோவில் என்றால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் பெருமை மிகுந்த மீனாட்சி அம்மன் கோவில். இதை தென்னாட்டின் தாஜ்மஹால் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவில் பழங்கால சிற்பக் கலைக்கும் கட்டிடக்கலைக்கும் வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாகவும் இருந்து வருகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்களை இனி காண்போம். தென் தமிழ்நாட்டில் எல்லோரும் தவிர்க்காமல் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆயிரம் கால் மண்டபம். இந்த ஆயிரம் கால் மண்டபம் ஒரு பெரிய ஒற்றை பாறையில் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 12 கோபுரங்களை காணலாம். அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசையை நோக்கி இருக்கும். இந்த கோபுரங்கள் அனைத்தும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் பூசப்படும்.
மீனாட்சி அம்மன் கோவிலில் மிக முக்கியமானது தாமரைக்குளம். இந்த குளத்திற்கு ஏன் அப்படி பெயர் வந்தது என்றால் இந்த குலத்தில் பூக்கும் தாமரை பூக்கள் தங்க நிறத்தில் இருந்ததாம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி மேலும் ஒரு சுவாரசிய தகவல் என்னவென்றால் இந்த கோவிலில் மொத்த கோபுரத்தில் சேர்த்து 33,000 சிற்பங்கள் இருக்கின்றதாம். ஒவ்வொன்னும் தனித்தனி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டது. இது தமிழ்நாட்டின் கட்டிடக்கலையில் பிரம்மாண்டமாக திகழ்கிறது.
இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சொல்லப்படும் மற்றொரு புராண கதை என்னவென்றால் இங்கு வீற்றிருக்கும் மீனாட்சி தாயானவள் பார்வதி தேவியின் அவதாரமாகவும் இந்த மீனாட்சி தேவி இன் சிலை மரகத கற்களால் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் மீனாட்சி பிறக்கும் பொழுது மூன்று மார்பகங்ளுடன் பிறந்ததாகவும் தன் கணவனாக இருக்கும் சரியான ஆடவரை அவள் சந்தித்தவுடன் மூணாவதாக இருக்கும் மார்பு மறைந்துவிடும் என்று வரம் பெற்றவளாக இருந்திருக்கிறாள். எப்போது சிவனின் அவதாரமான சுந்தரேஸ்வரரை அவள் சந்தித்தாளோ அப்போது மீனாட்சி அம்மனின் மூன்றாவது மார்பு மறைந்து விட்டதாக புராண வரலாறு கூறுகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் கைதேர்ந்த சிற்பக் கலைஞர்களால் கட்டப்பட்ட இந்த மீனாட்சியம்மன் கோவில் பின்னர் பாண்டியர்கள் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் புதுப்பிக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. நீங்கள் எப்போதாவது மதுரைக்கு சென்றால் தவறாமல் மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வாருங்கள். நம் பழங்கால பாரம்பரியம் நிச்சயம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.
