நாம் பலவிதமான இனிப்புகளை சாப்பிட்டு இருப்போம். மருத்துவ குணம் வாய்ந்த ஒரு இனிப்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் ரோஜா குல்கந்த். ஆயுர்வேதத்தில் முக்கிய அருமருந்தாக இருப்பது ரோஜா குல்கந்த். பன்னீர் ரோஜாவை எடுத்து வெயிலில் உலர்த்தி இனிப்பு மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்பபடுவது தான் ரோஜா குல்கந்த்.

ரோஜா குல்கந்த் சாப்பிடுவதால் உடலில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் இரைப்பை அலர்ஜி, தோல் பராமரிப்பு, அஜீரணம் அல்சர் மற்றும் மூக்கில் ரத்தப்போக்கு, மன அழுத்தம் போன்றவைக்கு ரோஜாக்கள் அருமருந்தாக இருக்கிறது. கடுமையான புண்கள் மலச்சிக்கல் போன்றவற்றையும் இது சரி செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரோஜா குல்கந்த் சாப்பிடலாம். மலச்சிக்கல் இருப்பவர்கள் இது சாப்பிட்டால் உடனே தீர்வு கிடைக்கும்.
வயிற்றுக் கோளாறுகள் எது இருந்தாலுமே தினமும் இரவில் வெந்நீரில் ரோஜா குல்கந்தை ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட வேண்டும். இந்த ரோஜாவில் இருக்கும் காரத்தன்மை வயிற்றில் இருக்கும் செரிமானத்திற்கு உதவும் அமிலங்களின் சமநிலையை சீர் செய்து கோளாறுகளை சரி செய்யும். இது மட்டுமில்லாமல் உடலில் பித்தம் அதிகமாகும் போது கிறுகிறுப்பு வாந்தி குமட்டல் போன்றவை உண்டாகக்கூடும். இந்த நேரத்தில் ரோஜா கொல்கந்தை சாப்பிட்டால் பித்தத்தை போக்கும்.

கோடை காலங்களில் அதிக வெப்பநிலை இருப்பதால் தலை சுற்றல் போன்ற உபாதைகள் ஏற்படும் போது ரோஜா குல்கந்த் சாப்பிடுவது நல்ல தீர்வாக இருக்கும். இது மட்டுமல்லாமல் ஆண்கள் ரோஜா குல்கந்த் எடுக்கும் போது உடல் வலிமையையும் ஆண்மையை பெருக்கும். தினமும் ஒரு ஸ்பூன் அளவு ரோஜா குல்கந்த் வெறுமனையாக சாப்பிடலாம் சுடு தாண்ணீரில் கலந்து சாப்பிடலாம். அப்படி இல்லையேல் பாலில் கலந்து சாப்பிடலாம். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பாலில் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்த் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். மேலும் இது சரும பாதுகாப்பிற்கும் அழகையும் அதிகப்படுத்தும். தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பளபளப்பை தரும் தன்மை ரோஜா குல்கந்த்திற்கு இருக்கிறது.
