மீடியாவே வேண்டாம்.. பிரேக்கப்- ஆல் உடைந்து போன ஜீ தமிழ் சீரியல் நடிகை.. மனம் திறந்து பேட்டி..!

By Nanthini on ஐப்பசி 4, 2024

Spread the love

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்ததாக முன்னணி சேனலாக உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் மாயா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அன்டாரா சவர்னாகர் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

   

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் சில விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், சந்தியா ராகம் சீரியலுக்காக நான் ஆடிஷன் வந்திருந்தேன். அங்கு வந்ததும் அந்த கதாபாத்திரம் எனக்கு செட் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் தெலுங்கில் ஒரு சீரியலில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். கால்ஷூட் பிரச்சனை வந்ததால் தெலுங்கு சீரியலில் இருந்து விலகி விட்டு இந்த சீரியலில் கமிட்டானேன்.

   

 

ஆடிஷன் வந்த ஒரு மாதத்திலேயே ஷூட்டிங் தொடங்கி விட்டது. இந்த கதாபாத்திரம் மூலம் எனக்கு நல்ல பெயரும் கிடைத்தது. நான் ஒருவரை காதலித்தேன். அவர் என் பிறந்தநாளில் அழகாக வாழ்த்துக்களை சொல்லி ஐ லவ் யூ சொன்னார். ஆனால் அந்த காதல் பிரேக்கப் ஆகி விட்டது. இப்போது அடுத்த காதல் திருமணம் பற்றி யோசிக்கும் எண்ணம் இல்லை. ஒருவேளை என் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள் என்றால் மீடியாவில் இருப்பவர்கள் வேண்டாம், நான் ரொம்ப பொசசிவ் என்பதால் அது எனக்கு செட்டாகாது என்று கூறி விடுவேன் என கூறியுள்ளார்.