பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர்.

G V Prakash
அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். அதன் பின்னர் இப்போது வரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் நடிகராக 25 படங்களுக்கு மேல் நடிகராகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பாய்ஸ் படத்தில் தானும் ஒரு நடிகராக அறிமுகமாகி இருக்க வேண்டியது என்றும் அந்த வாய்ப்பு எப்படி தவறியது என்றும் கூறியுள்ளார். அதில் “பாய்ஸ் படத்தின் போது இயக்குனர் ஷங்கர் என்னைத் தேடியுள்ளார். சிக்கு புக்கு ரயில் பாட்டெல்லாம் பாடியது நான்தான் என்பதால் அவருக்கு என் நினைவு வந்துள்ளது. ஆனால் அவரால் அப்போது என்னுடைய தொடர்பைப் பெற முடியவில்லை. இதைப் பின்னர் என்னிடம் ஒருமுறை அவரேக் கூறினார்” எனக் கூறியுள்ளார்.

Boys
ஜி வி பிரகாஷ் சொல்லியுள்ள இந்த தகவல் கொஞ்சம் முரணாக உள்ளது. ஏனென்றால் பாய்ஸ் படத்துக்கு இசையமைத்ததே ஜி வி பிரகாஷின் மாமாவான் ரஹ்மான்தான். அப்படி இருக்கையில் ஷங்கரால் எளிதாக ஜி வியின் தொடர்பைப் பெற்றிருக்க முடியும்.
