பிரபல நடிகரான சத்யராஜ் வேதம் புதிது திரைப்படத்தில் நடித்து திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு வால்டர் வெற்றிவேல், மலபார் போலீஸ், குங்குமப்பொட்டு கவுண்டர், வில்லாதி வில்லன், நண்பன், சின்னத்தம்பி பெரியதம்பி, குரு சிஷ்யன், கோவை பிரதர்ஸ், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார்.

இவருக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா மகிழ்மதி என்ற இயக்கம் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இன்று சத்யராஜ் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு திவ்யா சமூக வலைதள பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு தந்தைக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் கேப்ஷனில் என் தந்தைக்கு விலை உயர்ந்த பரிசுகளோ சொகுசு கார்களும் பிடிக்காது. அவர் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசனை செய்தேன். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது என் அப்பா அடிக்கடி சொல்லும் விஷயம் என்னவென்றால் மேக்கப் போடுவதால் நீ அழகாக முடியாது. இந்த சமூகத்திற்கு திருப்பி கொடுத்தால் தான் நீ அழகாக முடியும் என சொல்லிக் கொண்டே இருப்பார்.

எனவே என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை முதியோர்களுக்கு செலவு செய்துள்ளேன். அவர்களிடமிருந்து நானும் என் அப்பாவும் ஆசிகளை பெற்றுக் கொண்டோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் சத்யராஜ் தனது மகளுக்கு நல்ல கருத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார். உண்மையிலேயே அவர் புரட்சி தமிழன் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர் .
View this post on Instagram
