தொழில் தொடங்க ஆசையா?.. குறைந்த வட்டியில் ரூ.50,000 ஈஸியா கிடைக்கும்.. எப்படி பயன்பெறுவது..?

By Nanthini on ஐப்பசி 3, 2024

Spread the love

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசு செயல்படுத்தி வரும் முத்ரா யோஜனா கடன் திட்டம் சிறு தொழில் முனைவோர் மற்றும் சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த கடனுக்கு நீங்கள் எந்த அடமானமும் இல்லாமல் உடனடி கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளது. அதில் ஷிஷு பிரிவில் சிறு மற்றும் குறு வணிகங்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

   

பல்வேறு வங்கிகள் இந்த திட்டத்திற்கு கீழ் கடன் வழங்கும் நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை இந்த பிரிவில் கடன் பெறலாம். இதற்கு எந்த ஒரு உத்தரவாதம் மற்றும் திணை இல்லாமல் கடன் பெற்றுக் கொள்ள முடியும். சொந்த தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் பண பற்றாக்குறை இல்லாமல் இருக்க உதவுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த கடன் புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவு படுத்தவும் பெரும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில் குறைந்த வட்டியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை திருப்பி செலுத்தும் காலம் உள்ளது. உத்திரவாதம் அல்லது பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. செயலாக்கம் கட்டணமும் கிடையாது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

   

 

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

விண்ணப்பதாரர் சிறு தொழில் முனைவோராக இருப்பது அவசியம். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் எஸ்பிஐ சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வணிகம் விவசாயம் அல்லாத துறையுடன் தொடர்புடையதாக இருப்பது அவசியம்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற அடையாளச் சான்று, முகவரி சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வணிகம் தொடர்பான ஆவணங்கள் இருக்க வேண்டும்.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.onlinesbi.sbi என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.