சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தனுஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தினமும் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகி சவரக்கோட்டையில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்னைக்கு வருகிறார்.

கார்மெண்ட்சில் வேலை பார்க்கும் ஆனந்தியை அதன் உரிமையாளர் மகேஷும், கவர்மெண்ட்ஸில் வேலை பார்க்கும் அன்புவும் காதலித்து வருகின்றனர். எப்போதுமே சூப்பர்வைசர் கருணாகரன் ஆனந்திக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். மித்ராவும் ஆனந்திக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார். மகேஷ், அன்பு இருவருமே ஆனந்தி மீது அக்கரையாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் மகேஷ் ஆனந்தியை தான் காதலிக்கிறார் என்பது அன்புக்கு தெரியவருகிறது. இதனால் ஆனந்தியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறார். மேலும் கார்மெண்ட்ஸ் பணியை விட்டு விலக முடிவு செய்து கடிதம் கொடுக்கிறார். இது பற்றி அறிந்ததும் ஆனந்தி உட்பட அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். ஆனந்தி அன்பு தன்னை விட்டு விலகுவதற்கான காரணம் தெரியாமல் அழுகிறார்.

இதற்கிடையே அழகன் யார் என்று ஆனந்தி அன்பு விடம் கேட்கிறார். ஆனால் அன்பு அழகன் செத்துட்டான் என கூறி தொடர்ந்து ஆனந்தியை திட்டி அவரிடம் இருந்து விலகுகிறார். மற்றொரு சீனில் அன்பு இப்படி நடந்து கொள்வதற்கான காரணத்தை அவரது நண்பர் கேட்கிறார். உடனே அன்பு ஆனந்தியை மகேஷ் காதலிக்கும் உண்மையை கூறுகிறார். அனைத்து தடைகளையும் தாண்டி ஆனந்தி அன்பு ஒன்று சேர்வார்களா என்பதை இனிவரும் எபிசோடில் பார்ப்போம்.
