தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக ஷங்கர் மற்றும் கணேஷ் இருந்துள்ளனர். இவர்கள் இரட்டையர்கள். இந்திய திரை இசை உலகில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டவர்கள் சங்கர் கணேஷ். இவர்களை யாராலும் மறக்க முடியாது. இவர்கள் சினிமாவில் ஆரம்பத்தில் இசை அமைத்த பாடல்களை அனைவரும் கேட்டாலும் இவர்கள்தான் என்று பல பேருக்கு தெரியாது இருந்தது. பிறகு நாட்கள் செல்ல செல்ல இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டனர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் திசை இயக்குனர், பாடகர் என்று பல துறைகளில் கலக்கினர்.

இவர்களுடைய பாடல்கள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணியாற்றியுள்ள இவர்கள் 1967 ஆம் ஆண்டு மகர ராசி என்ற படத்தில் பாடிய பாடல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகினர். இவர்கள் வாழ்க்கைக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து இதுவரை இவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில் புகழ்பெற்ற சங்கரின் மகன் சின்னத்திரையில் பிரபலமான ஹீரோ. வெள்ளி திரைகளும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவர்தான் ஸ்ரீ. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சிவசக்தி, ருத்ரா, யாரடி நீ மோகினி, மேகலா உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் தனது அப்பா குறித்து பேசியுள்ள ஸ்ரீ, என்னுடைய அப்பா அவர்தான் என்று இன்றும் பலருக்கும் தெரியாது.

நான் அந்த அளவிற்கு அவருடைய பெயரை வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டேன். அவர் இசைத் துறையில் இருந்ததால் என்னையும் இசைத்துறையில் இழுக்க முயற்சித்தார். ஆனால் நான் விருப்பமில்லாமல் அப்படியே நடிப்பு பக்கம் வந்து விட்டேன். அவருடைய பெயரை அதிக அளவு நான் வெளியில் சொல்வதும் இல்லை அவருடைய பெயரை நான் கெடுக்கவும் விரும்பவில்லை. அதனால்தான் எந்த இடத்திலும் அவர் பெயரை நான் பயன்படுத்துவதில்லை என்று ஸ்ரீ கூறியுள்ளார்.
