என்னம்மா மாத்தி மாத்தி பேசுறீங்க..? கெனிஷா ரொம்ப நல்ல பொண்ணு.. நான் அவகிட்ட பேசினேன்.. சுசித்ரா வெளியிட்ட வீடியோ வைரல்..!!

By admin on புரட்டாதி 27, 2024

Spread the love

பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். திடீரென ஜெயம்ரவி தனது மனைவியை பிரிவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பிரபல பாடகி கெனிஷா தான் காரணம் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்து ஏற்கனவே ஜெயம் ரவி பிரதர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

   

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பாடகையான சுசித்ரா ஆர்த்திக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் கெனிஷா உடன் ஜெயம் ரவி வாழ விரும்புவதால் ஆர்தியை விட்டுப் பிரிந்தார் என இணையத்தில் செய்திகள் உலா வந்தது. இது பற்றி சுசித்ரா பேசியதாவது Ayahuasca என்ற சிகிச்சை முறையை கெனிஷா பயன்படுத்துகிறார். இது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது.

   

Singer Keneeshaa Francis Responds To rumour With Actor Jayam Ravi Divorce controversy Full Story | Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா ...

 

இந்த மருந்தை பயன்படுத்தினால் அதீத கோபம் வருமாம். அந்த மருந்தின் பிடியில் சிக்கியதால் தான் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். ஆர்த்தி ஈகோ பார்க்காமல் இறங்கி வந்து சோசியல் மீடியாவை நம்பாமல் கண்ணகி போல செயல்பட வேண்டும் என அட்வைஸ் கொடுக்கும் விதமாக சுசித்ரா பேசியிருந்தார்  அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் சுசித்ரா சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, தினமும் நாம் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொள்வோம்.

கேனிஷா பக்கா பிராடு… ஜெயம் ரவி பத்தோடு பதினொன்னு தான்… இதற்கு முன்பு எத்தனை பேர் தெரியுமா.?

அதே மாதிரி தான் நானும் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன். நான் ஜெயம் ரவி கெனிஷா பற்றி பேசி வீடியோ வெளியிட்டேன். அதன் பிறகு நானே அந்த வீடியோவை ஒரு சில மணி நேரங்களில் நீக்கிவிட்டேன். அதற்கு நான் காரணம் சொல்ல விரும்பவில்லை. சோசியல் மீடியாவில் கெனிஷா மீது அவதூறு பரப்புவதற்கு செய்திகள் உலா வருகிறது. நான் கெனிஷாவிடம் பேசினேன். அவர் ரொம்ப நல்ல பொண்ணு. அவர் மீது அவதூறு பரப்புவதற்கு நிறைய பேர் முயற்சி செய்கின்றனர் என பேசியுள்ளார்.

சுசித்ரா பேசுறது தேவையில்லாதது... காலகாலமா சினிமாவில நடக்குறது தான்அந்த விஷயம்! | bismi told about suchithra statement is not necessary