“என் வாழ்நாளில் இதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி”.. மகன்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி எமோஷனல் பதிவு போட்ட விக்னேஷ் சிவன்..!

By Nanthini on புரட்டாதி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

   

தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு உள்ளது.

   

 

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அந்த காதல் அப்படியே பாதியில் முடிந்து விடும் என்று பலர் கூறி வந்த நிலையில் அவர்களின் அன்பை நிரூபிக்கும் விதமாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் நயன்தாரா அடிக்கடி தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் அடிக்கடி தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து 2வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நான் உங்களுக்கு உயிர் & உலகம் என்று பெயரிட்டபோது. நீங்கள் இருவரும் என் உயிர் & உலகாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

அம்மாவும் அப்பாவும் முழுக் குடும்பமும் இந்த முழு வாழ்நாளில் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும், கடவுள் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதையும், நம்மை ஆசீர்வதிக்கும்போது தாராள மனப்பான்மையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.