கல்லூரியில் படிக்கும்போது இளையராஜா டியூனை போட்டு கைதட்டல் வாங்கிய பிரேம்ஜி… இளையராஜாவிடம் சொன்னபோது அவர் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா..?

By admin on புரட்டாதி 26, 2024

Spread the love

பிரேம்ஜி அமரன் கடந்த 1979-ஆம் ஆண்டு மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்தார். இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. வெளிநாடுகளுக்கும் சென்று பிரேம்ஜி இசை பயின்றுள்ளார். பல படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வேலை பார்த்துள்ளார்.

Premji Amaran Playlist Thee pidikka, saroja saman nikalo | Premji Playlist : இந்த ஹிட் பாடல்களை பாடியவர் பிரேம்ஜியா? இது தெரியாம போச்சே!

   

இந்நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே, சென்னை 28 படத்தில் ஜல்சா, கோவா படத்தில் கோவா தீம் பாடல், மங்காத்தா திரைப்படத்தில் விளையாடு மங்காத்தா ஆகிய பல பாடல்களை பிரேம்ஜி ரீமிக்ஸ் செய்து சூப்பர் ஹிட் ஆக்கினார்.

   

 

கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஞாபகம் வருதே திரைப்படத்திற்கு பிரேம்ஜி தான் இசை அமைத்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான மன்மத லீலை திரைப்படத்திற்கு அவர்தான் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் ஒரு மியூசிக் காலேஜில் பிரேம்ஜி படித்துள்ளார்.

அவ்ளோதான் நோ மேரேஜ்... வாழ்நாள் முழுசும் சிங்கிள்தான்... என்னங்க பிரேம்ஜி இப்படி சொல்லிட்டாரு | Premgi Amaran says he dont want to get married in his lifetime - Tamil Filmibeat

அந்த நேரத்தில் அவருக்கு ஒரு டெஸ்ட் வைத்துள்ளனர். அப்போது பிரேம்ஜி புன்னகை மன்னன் BGM நோட்டை எழுதி கொடுத்து பயங்கர கைதட்டல்களை வாங்கியுள்ளார். இதனை அடுத்து சில நாட்கள் கழித்து இது பற்றி இளையராஜாவிடம் பிரேம்ஜி கூறியுள்ளார். அதற்கு இளையராஜா பரவாயில்லை. நீயாவது சொல்ற மத்தவங்க சொல்லாம செய்றாங்க என்று கூறியுள்ளார்.

1417th film made with Ilayaraja music | இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்