“எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை”.. நினைவு தினத்தில் தமிழக அரசு செய்த மரியாதை.. நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட சரண்..!

By Nanthini on புரட்டாதி 26, 2024

Spread the love

இந்திய திரை உலகில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். தமிழ் திரை இசையில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். தமிழ் திரை உலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர். இவருடைய குரல் என்பது மூன்று தலைமுறையின் குரல். அதனால்தான் இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பாடிக் கொண்டே இருந்தார்.

   

தமிழ் திரை இசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்ற அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியது. அவர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவருடைய இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டுள்ளார். இவர் மறைந்த நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

   

 

நான்கு ஆண்டுகள் ஆனாலும் அவருடைய அமுத குரலால் பாடப்பட்ட பாடல்கள் காற்றை இனிமையாக்கி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை” என்று பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து எஸ் பி பாலசுப்பிரமணியம் மகன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nikil Murukan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@onlynikil)