ஜெகன்மோகன் ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ள லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை ஆய்வு செய்தபோது மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு ஆகியவை கலக்கப்பட்டது உறுதியானது.
)
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் 11 நாட்கள் தவம் இருக்கப் போவதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரபல தமிழ் நடிகரான கார்த்தி நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட விழாவில் பங்கேற்றார்.
விழா மேடையில் வைத்து சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு தின்ன ஆசையா என்ற காட்சி ஒளிபரப்பானது. அப்போது தொகுப்பாளர் லட்டு தின்ன ஆசையா என கேள்வி கேட்டுள்ளார். உடனே கார்த்தி சாமர்த்தியமாக லட்டு தற்போது சென்சிடிவ் டாபிக் அதனால் அதைப் பற்றி பேச வேண்டாம் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

உடனே ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சினிமா வாழ்க்கையில் லட்டுவை கிண்டல் அடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால் சனாதன தர்மம் பற்றி பேசும் போது பேசும் வார்த்தையை 100 முறை யோசித்துப் பேச வேண்டும் என பேசி உள்ளார். இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
“Don’t Say that Laddu is a sensitive issue, I respect you as an actor…”
– AP Deputy CM #PawanKalyan counter to #Karthi over his comments on #TirumalaLaddu pic.twitter.com/30uBj9Sfvz
— Daily Culture (@DailyCultureYT) September 24, 2024
