நொடி பொழுதில் உயிர் தப்பினோம்.. கொஞ்சம் அசந்து இருந்தா அவ்வளவுதான்.. திரில்லிங் சம்பவத்தை பகிர்ந்த இயக்குனர் பிரேம்..!

By Nanthini on புரட்டாதி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் பிரேம்குமார். இவர்  தமிழில் 96 திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் அனைவருடைய பள்ளி பருவ நினைவுகளை எடுத்துச் செல்லும் படமாக இந்த படம் அமைந்திருந்தது.

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

 

இந்நிலையில் பிரேம் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மெய்யழகன் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், கடலுக்குள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது நானும் கார்த்தியும் அங்கு நின்று கொண்டிருந்தோம். திடீரென அனைவரும் எங்களை உற்று நோக்கி பார்த்தார்கள். அப்போது இரண்டு பக்கமும் இருந்து அலைகள் எழும்பி எங்களை அப்படியே மேலே தூக்கி அடித்து கீழே போட்டது.

சற்று அசந்திருந்தால் பாறை மீது மோதி பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். அந்த சமயத்தில் நொடி பொழுதில் உயிர் தப்பியது போல இருந்தது. அன்று முழுவதுமே நானும் கார்த்தியும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அன்று இரவு சாப்பிடும் போது தான் கார்த்தி என்னை பார்த்து கொஞ்சம் அசந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று கூறினார். அது மிகவும் திகிலான சம்பவம் அதனை மறக்கவே முடியாது என பிரேம் பகிர்ந்து கொண்டார்.