தயராகும் 7G ரெயின்போ காலனி 2.. யுவனுக்கு டாடா காட்டிய செல்வராகவன்..!!

By admin on புரட்டாதி 19, 2024

Spread the love

பிரபல இயக்குனரான செல்வராகவன் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பிலும் செல்வராகவன் கவனம் செலுத்துகிறார்.

அனுபவம்... தத்துவம் அல்ல!” - கவனம் ஈர்த்த செல்வராகவன் ட்வீட்கள் | actor  Selvaraghavan tweets liks philosophy getting viral - hindutamil.in

   

பீஸ்ட், நானே வருவேன், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட திரைப்படங்களில் செல்வராகவனின் நடிப்பு அசத்தலாக இருக்கும். இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமானார். சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார்.  படம் சூப்பர் ஹிட் பல ஃபிலிம்பேர் விருதுகளை தட்டி சென்றது.

   

PHOTOS : மறக்கமுடியுமா அந்த காட்சிகளை..! நினைத்து பார்க்க வைக்கும் 7G  ரெயின்போ காலனி.. | Director Selvaraghavan Going To Direct 7G Rainbow Colony  - Oneindia Tamil

 

இந்த நிலையில் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க செல்வராகவன் முனைப்போடு வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தலைவராகவன் பிரபல இயக்குனரான ஜிவி பிரகாஷுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அனேகமாக 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்திற்கு தான் ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

யுவன் துபாயில் இருப்பதாலும் ஒரு சில காரணங்களாலும் இசையமைக்கவில்லை என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது. வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன், அங்காடித்தெரு, பொல்லாதவன், ஆடுகளம், தெய்வத்திருமகள் மயக்கம் என்ன உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். சூரரை போற்று திரைப்படம் ஜிவி பிரகாஷ் தேசிய விருதை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கதாகும்.