விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிரபலமாவதற்கு அதன் தொகுப்பாளர்களும் ஒரு காரணம் என்று கூறலாம். அந்த வகையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வருபவர் பிரியங்கா.

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளனியாக வேலை பார்த்து வருகிறார். பிரியங்கா தேஷ்பாண்டே ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றால் அந்த நிகழ்ச்சி அசத்தலாக இருக்கும். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பிரியங்காவிடம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. பிரியங்கா தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

யூட்யூப் சேனலில் 1.50 மில்லியன் சப்ஸ்கிரைபர் உள்ளனர். அதன் மூலம் வருடத்திற்கு லட்சக்கணக்கில் அவருக்கு வருமானம் வருகிறது. ஒரு எபிசோடை தொகுத்து வழங்க பிரியங்கா 2 முதல் 2.5 லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவருக்கு சென்னையில் சொந்தமாக வீடும் உள்ளது.

