நீங்க அப்படி சொன்னது மனசுக்கு கஷ்டமா போயிடுச்சு… மேடையில் தினேஷ் கார்த்திக்கிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன விஷயம்..!!

By admin on புரட்டாதி 18, 2024

Spread the love

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்  சன் டிவியில் ஒளிபரப்பான அசத்துப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அட்டகத்தி திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புகழைத் தேடித் தந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு ரிலீசான காக்கா முட்டை திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கப்பட்டது.

   

இவர் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ், பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்கும் பங்கேற்றார்.

   

சிவகார்த்திகேயனின் கனவு படம் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "கனா" படத்தின்  முக்கிய அறிவிப்பு!!

 

நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, கிரிக்கெட் எல்லாருக்குமே பிடிச்ச ஒரு விளையாட்டு. நான் கனா படத்தில் நடிச்சேன். தினேஷ் கார்த்திக் சார்கிட்ட அதை பத்தி சொன்னேன். அவர் படம் பார்க்கலன்னு சொன்னாரு. அது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நீங்க அந்த படம் கண்டிப்பா பாருங்க. எனக்கு நிஜமாகவே பேட், பால் எதுவுமே பிடிக்க தெரியாது. ஆனால் கனா படத்தில் நான் ஆப் ஸ்பின்னரா பிளே பண்ணி இருந்தேன்.

அந்த பந்து எப்படி போடணும்னு ஒரு ஆறு மாசமா டைம் எடுத்து பிராக்டிஸ் பண்ணி நடிச்சேன். கிரிக்கெட் விளையாடும் போது நிறைய அடிபடும். எனக்கும் அடி பட்டிருக்கு. எனக்கு எப்போ கூட ஞாபகம் இருக்கு. கோவிட் டைம் நடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே ஒரு பந்து ஒரு ரன்ல தோத்துடுச்சு. கிரிக்கெட் அப்படின்றது ஒரு எமோஷன். எல்லாருக்குமே அது ஒரு பர்சனலா இருக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு என கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்களின் நன்மதிப்பைக் குறிப்பிட்டு  நெகிழ்ச்சி! | Dinesh Karthik Officially Announces Retirement - hindutamil.in