அந்த படத்துக்கு பூச்சாண்டின்னு டைட்டில் வச்சிருக்கணும்.. என்னோட பெஸ்ட் ஒர்க் அதுதான்.. மனம் திறந்து பேசிய வெங்கட் பிரபு..!!

By admin on புரட்டாதி 18, 2024

Spread the love

பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீசான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, பார்ட்டி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

   

கடைசியாக தளபதி விஜயை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்தார். நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும் பிரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

   

Venkat Prabhu Viral Tweet about Suriya Massu Engira Masilamani Movie

 

சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, நிறைய பேரு என்னோட ரைட்டிங்ல பெஸ்ட் வொர்க் மாஸ் படம் தான்னு சொல்லுவாங்க. எங்கேயும் எப்போதும் படத்தை கனெக்ட் பண்ணி அதுல வர மாதிரி இருக்கும். ஜெய் பேயா வருவாரு. நிறைய பேரு அந்த படத்தை விரும்பி பார்க்கிறாங்க. அந்த டைம்ல மாஸ் அப்படின்னு டைட்டில் இருந்ததினால் அது ஒரு கமர்சியல் படம்னு ஆடியன்ஸ் நெனச்சி இருக்காங்க.

Massu Engira Masilamani on Moviebuff.com

நிறைய பில்டப், ஆக்சன் எல்லாம் இருக்குன்னு நினைச்சிருக்காங்க. ஆனா நான் குழந்தைகளுக்கு புடிக்கிற மாதிரி கேஷுவலா ஒரு பேய் கதையை காமெடியா சொல்லி இருந்தேன். மாஸ் என்கிற மாசிலாமணி அப்படிங்கிற ஒருத்தரை ஷார்ட்டா மாஸ் அப்படின்னு கூப்பிடுறாங்க. கடைசில அதுவே சரியா வரல. நான் அந்த படத்துக்கு பூச்சாண்டி என்று பெயர் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.