கண்டிப்பா வாழை 2 வரும்.. அதோட கதை தான் இது.. மேடையில் இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கம்..!

By Nanthini on புரட்டாதி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளன. குறிப்பாக தேசிய விருது பெற்ற பரியேறும் பெருமாள், தனுஷின் கர்ணன், மாமனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுதலை பெற்றன. இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வாழை.

   

இந்த திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கும் படம் பைசன். சொல்ல வந்த கருத்தை துணிச்சலாக சொல்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சொல்ல வந்த கருத்தை துணிச்சலாக சொல்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தான் இயக்கும் படங்களில் அழகாக கடத்துவதில் இவர் சிறந்தவர்.

   

 

இந்த நிலையில் வாழ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜ், நடிகை நிகிலா விமல், திவ்யா துரைசாமி, நடிகர் கலையரசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ், வாழை திரைப்படம் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு காரணம் என்னுடைய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்கள் தான்.

முக்கியமாக என்னுடைய கண்ணீரையும் கவலையையும் கலை வடிவமாக மாற்றியது தான் என்னுடைய பெருமை. இந்த கலைக்கு எப்போதும் நான் உண்மையாக இருப்பேன். வாழை 2 நிச்சயமாக எடுப்பேன். இதற்குப் பின்னாடி இருக்கிற கதையை சிவனணைந்தனை வைத்து எடுப்பேன். அது என்னை இன்னும் நீங்கள் புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். எனவே வாழை 2 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.