தமிழ் சினிமாவில் அலைபாயுதே படம் மூலமாக மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மாதவன். அந்த படம் ஹிட்டாக தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் கதாநாயகர்களில் ஒருவரானார். தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
அலைபாயுதே ஹிட்டானதும் விஜய், அஜித் போன்ற அப்போதைய இளம் ஹீரோக்கள் ஏழெட்டு ஆண்டுகள் போராடி பெற்ற புகழை மாதவன் ஒரே படத்தில் பெற்றார். அதையடுத்து அவர் நடித்த என்னவளே என்ற திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

madhavan in run movie
அப்போது மாதவனை புக் செய்ய வந்திருந்த ஒரு தயாரிப்பாளர் அவரிடம் எவ்வளவு சம்பளம் எனக் கேட்டுள்ளார். அதற்கு மாதவன் ஒரு தொகையை சொல்லியுள்ளார். அதைக் கேட்ட தயாரிப்பாளர் படம் என்னவளே ப்ளாப் ஆகிடுச்சு. அப்படியும் ஏன் இவ்ளோ சம்பளம் கேக்குறீங்க எனக் கேட்டுள்ளார்.
அதைக் கேட்ட மாதவன் “சார் நான் கொஞ்சம் நல்ல நடிகன், நல்லா நடிப்பேன் என்பதால் தான் என்னை வைத்து படம் எடுக்குறீங்கன்னு நெனச்சேன். ஆனால் நீங்க என் கடைசி படத்தை வச்சுதான் எனக்கு சம்பளம் கொடுப்பீங்கன்னா, உங்க படத்துல நான் நடிக்கல.” என சொல்லி அனுப்பிவிட்டாராம்.

madhavan in run movie
அப்புறம் மாதவன் மின்னலே மற்றும் ரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வெற்றிப் பட நாயகனாகிவிட்டார். அப்போது அதே தயாரிப்பாளர் மாதவனிடம் கால்ஷீட் கேட்க வந்துள்ளார். அப்போது மாதவன் வேண்டுமென்றே அந்த தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி வரும் அளவுக்கு ஒரு சம்பளத்தை சொன்னாராம். அதைக் கேட்டு அதிர்ச்சியான தயாரிப்பாளரைப் பார்த்து “நீங்கதான சார் சொன்னீங்க. கடைசி படத்தை பொருத்துதான் சம்பளம்னு. இப்ப என் கடைசிப் படம் ரன் சூப்பர் ஹிட்” என பதிலளித்தாராம். இந்த சம்பவத்தை மறைந்த நடிகர் மாரிமுத்து தன்னுடைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
