பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தனுஷ்க்கு ஜோடியாக தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் தான் நடித்த ஒவ்வொரு படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி ஒரு சிறப்பு பரிசு பொருளை கொடுத்துள்ளார்.

இதுவரை எந்த ஒரு நடிகையும் கீர்த்தி சுரேஷ் போல இருந்தது கிடையாது. ஒவ்வொருவருக்கும் கீர்த்தி சுரேஷ் முக்கியத்துவம் கொடுப்பார். இப்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு துபாயில் இருக்கும் நண்பர்களுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்து ஓணம் பண்டிகையை செலப்ரேட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்து லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.

#image_title
