தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நகைச்சுவை, குணசித்திரம், கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்திரா. தமிழில் முத்து, ரசிகன், சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் விசித்ரா நடித்துள்ளார். திருமணமான பிறகு விசித்ரா நடிப்பை விட்டு விட்டு பூனேவில் தங்கி விட்டார். இதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் மாமி சின்ன மாமி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விசித்ரா குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இப்போது பிரபல பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா போட்டியாளராக கலந்து கொண்டார். சமீபத்தில் விசித்ரா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சாலின் சோயா பிக் பாஸுக்கு வந்தால் எப்படி இருக்கும்? அவங்கள ஓவியா கூட கம்பேர் பண்ணி பேசிட்டு இருக்காங்க.

இவங்க கேரக்டர் ரொம்ப இன்னசென்ட் அப்படின்னு சொல்றாங்க. அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விசித்திரா ஒரு போட்டியாளரை இன்னொரு போட்டியாளர் கூட கம்பேர் பண்ணி பேசுறது பெரிய மைனஸ் பாயிண்ட். சோயாவோட இண்டிசுவாலிட்டி தெரியணும். ஓவியா மாதிரி அப்படின்னு சொன்னா அந்த எக்ஸ்பெக்டேஷனோட எல்லாரும் பார்ப்பாங்க. அப்போ இந்த பொண்ணுக்கு பிரச்சனையா தான் ஆகும். அவங்க வந்தா ஒரு 4 வாரம் அவங்க எப்படிங்கறத பாக்கணும் என கூறியுள்ளார்.

மேலும் சோயாவின் காதலரான டிடிஎஃப் வாசன் பிக் பாஸ் வந்தால் எப்படி இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விசித்திரா, எனக்கு டிடிஎஃப் வாஸ்ன யாருன்னு தெரியாது. ஆனா சோயாவோட காதலர் என்று சொல்றீங்க. அப்படி அவங்க உள்ள வரும்போது ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்க உள்ள இருக்கும்போது அது ரொம்ப சப்போர்ட்டிவா இருக்கும். ஒரு நேரம் அதுவே சண்டையா மாறிடும். அது ஒரு பிளஸ் பாயிண்ட்டா எனக்கு தெரியல. அது மைனஸ் ஆக கூட ஆகலாம் என விசித்திரா கூறியுள்ளார்

#image_title
