தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசி கொண்டு இருப்பது மணிமேகலை பிரச்சனை தான். குக் வித் கோமாளியில் மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக பல காரணங்களை கூறி மணிமேகலை காணொளியாக வெளியிட்டு இருக்கிறார். அதுதான் தற்போது இணையத்தில் பேச்சு பொருளாகி வருகிறது.

மணிமேகலை தான் நடத்தி வரும் youtube சேனலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியதற்கான காரணம் என்ன என்பதை பற்றி ஒரு நீண்ட காணொளியாக வெளியிட்டு இருக்கிறார். அதில் என் தன்மானத்திற்கு பிரச்சினை வந்தது அதனால் தான் நான் வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார். மேலும் பெயர் குறிப்பிடாமல் பிரியங்காவை பற்றி ஒரு சில குற்றச்சாட்டுகளையும் வைத்திருக்கிறார்.
அது என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதற்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கிறாங்க அது என்னோட வேலை என்னோட வேலையில அவங்க கண்டஸ்டன்டா இருக்கிறவங்க அந்த வேலைய மட்டும் பாக்காம நீ அப்படி பண்ணி இப்படி பண்ணினு என்னை ரொம்ப டாமினேட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு விஷயத்திலும் நான் எவ்வளவு தடவை தான் விட்டுக் கொடுக்கிறது. ஒரு கட்டத்துல அளவுக்கு மேல போயிடுச்சு. என்னால அதை ஏத்துக்கவே முடியல. என்னால சுயமா வேலை செய்யவே முடியல.
அந்த அளவுக்கு அவங்களுக்கு தான் எல்லாம் தெரியும் தொகுத்து வழங்குவதை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது அப்படிங்கிற மாதிரி ரொம்ப பேச ஆரம்பிச்சாங்க. அப்போ என் தன்மானத்துக்கு ரொம்ப பிரச்சனை அப்படிங்கற இடத்தில தான் நான் வெளியேறினேன் அதுக்கு பிறகு நிறைய விஷயங்கள் நடந்தது. அவங்கள அட்ஜஸ்ட் பண்ணி போக சொன்னாங்க இதனால உங்களுக்கு நிறைய ப்ரோக்ராம் கிடைக்கும் அப்படி இப்படின்னு எல்லாம் பேசுனாங்க. நான் வந்து எப்பவுமே திறமையை மட்டும் தான் நம்புறேன். திறமை இருந்தா எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
குக் வித் கோமாளி சீசன் 1லிருந்து நாலு வரைக்கும் நாங்க வேலை செஞ்ச ப்ரொடக்ஷன் ஹவுஸ் வந்து ரொம்ப ப்ரொபஷனல் ஆனவங்க. ரொம்ப நல்லா நிகழ்ச்சியை எடுத்துட்டு போனாங்க. இந்த தடவை குக் வித் கோமாளி ப்ரொடக்ஷன் ஹவுஸ் வந்து ரொம்ப அன் பிரபஷனலா நடந்துக்கிட்டதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. நான் பட்ட கஷ்டம் அதுக்கு மக்கள் கொடுக்கிற சப்போர்ட் இதுவே எனக்கு போதும் வேற நான் பணத்துக்காகவும் பெயருக்காகவும் என் தன்மானத்தை விட்டுக் கொடுத்துட்டு வாழ விரும்பல. அதனாலதான் குக் வித் கோமாளியை விட்டு நான் வெளியேறி விட்டேன் என்று காணொளி பதிவிட்டது தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

அவர் பதிவிட்ட காணொளிக்கு பல விஜய் டிவி பிரபலங்கள் ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றனர். டி எஸ் கே, ஃபரீனா, குரேஷி போன்ற பலர் மணிமேகலைக்கு ஆதரவாக கமெண்ட் செய்து அவருக்கு சப்போர்ட் செய்வதாக கூறியிருக்கின்றனர். விஜய் டிவியில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
