தேவயானி மகாராஷ்டிராவில் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் நடித்த மிகவும் பிரபலமான புகழ்பெற்ற நடிகைகளுள் ஒருவராவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தேவயானி. முதலில் ஹிந்தி திரையுலகில் தான் நடித்து அறிமுகமானார் தேவயானி.

1996 ஆம் ஆண்டு அஜித் அவர்களுடன் இணைந்து காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தேவயானி. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முதல் படத்தின் மூலமாகவே பெயரும் புகழையும் பெற்றார் தேவயானி. அடுத்ததாக 1997 ஆம் ஆண்டு சரத்குமார் உடன் இணைந்து சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அடுத்ததாக மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, பாரதி, தெனாலி, ஃபிரண்ட்ஸ், ஆனந்தம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பிரபலமான தேவயானி அதற்குப் பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்தார் தேவயானி.
சன் டிவி தயாரித்த மெகா தொடரான கோலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் பெண்களின் ஆதரவை பெற்றார். 2003 இல் இருந்து 2009 வரை மிகப் பிரபலமாக ஓடிய தொடர்களுள் ஒன்றுதான் கோலங்கள். புகழின் உச்சியில் பிசியான நடிகையாக வலம் வந்த தேவயானி 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார் தேவயானி.
அவர் கூறியது என்னவென்றால் என் கணவர் தான் முதலில் என்னை வந்து காதலிப்பதாக சொன்னார். ஆனால் முடியாது என்று தான் முதலில் சொன்னேன். அதற்குப் பிறகு அவரை பார்க்கும்போது அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது பெண்களை ரொம்ப மதிக்க கூடியவர் ரொம்ப பாசிட்டிவான பெர்சன் அதனால எனக்கு அவரை ரொம்ப புடிச்சி இருந்தது. காதலிச்சோம். அதற்குப் பிறகு நான் அவரை காதலிப்பதை பற்றி எங்கள் வீட்டில் நான் சொன்னேன்.

ஆனா அப்பா அம்மா ஒத்துக்கவே இல்ல. அம்மா ரொம்ப சண்டை போட்டாங்க. நல்ல ஒரு சோசியல் ஸ்டேட்டஸ் இருக்கிற ஒரு பெரிய பேக்ரவுண்ட் இருக்க பையன கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சு இருக்காங்க. நான் வந்து அதை எதுவுமே விரும்பல. என்ன நல்ல முறையில் வச்சிருக்காங்களா அப்படின்னு தான் நான் பார்த்தேன். சோஷியல் ஸ்டேட்டஸ் வச்சு ஒண்ணுமே பண்ண முடியாது. அப்புறம் வீட்ல எவ்வளவோ சொல்லி அவங்க சமாதானம் ஆகல அப்படின்னு தான் நான் தனியா டெசிஷன் எடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அம்மா ரொம்ப சண்டை போட்டாங்க ரொம்ப வருஷம் பேசாமயே இருந்தாங்க என் இரண்டாவது பொண்ணு பிறந்ததுக்கு அப்புறம் தான் அம்மாவும் அப்பாவும் என்ன வந்து பார்த்து பேசினாங்க என்று தனது திருமணத்தின் போது நடந்த நிகழ்வுகளை பற்றி பகிர்ந்துள்ளார் தேவயானி.
