தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்கள் இவங்கதான்… ஓபனாக பேசிய நடிகர் பிரித்விராஜ்…

By admin on புரட்டாதி 14, 2024

Spread the love

பிரித்விராஜ் மூத்த நடிகர்கள் சுகுமாரன் மற்றும் மல்லிகா ஆகியோரின் மகனாவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்தியாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரித்விராஜ்.

   

2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான பிரித்வராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு பாக்யராஜ் அவர்களின் மகளான சரண்யா பாக்யராஜ் உடன் இணைந்து பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரித்திவிராஜ். சரண்யா பாக்யராஜ் நடித்த முதலும் கடைசிமான திரைப்படம் பாரிஜாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

   

2007 ஆம் ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து மொழி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் பாராட்டுகளை பெற்றார் பிரித்விராஜ். தொடர்ந்து சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன் சமீபத்தில் ஆடிஜிவிதம் கிய திரைப்படங்களில் நடித்தவர் பிரித்விராஜ்.

 

தென்னிந்தியாவில் மிகவும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ். தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார் பிரித்திவிராஜ். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிரித்விராஜ் தமிழ் சினிமா இயக்குனர்களை பற்றி பேசி இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பேச வேண்டிய கருத்துகளை கொண்ட படங்கள் எல்லாம் வெளிவந்து கொண்டே இருக்கிறது. நிறைய நல்ல இயக்குனர்கள் இருக்காங்க. அதுல வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா. ரஞ்சித், அட்லி ஆகியோர் தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களாக நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார் பிரித்விராஜ்.