தமிழ் சினிமாவில் 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் சிவகுமார். இந்தத் திரைப்படத்தில் டி ராஜேந்தர் நாயகனாக நடிக்க சுரேந்தர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சிவகுமார் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் சிவகுமாருக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சிவகுமாருக்கு ஏவிஎம் தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் முதல் முறையாக இணைந்து நடிப்பதால் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்த சிவக்குமாருக்கு எம்ஜிஆர் அழைத்து தன்னுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பை வழங்கினார். சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த படத்தில் நடிக்க மறுத்த சிவக்குமார் அடுத்து காவல்காரன் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடித்தார்.

இந்தப் படம் தான் எம்ஜிஆர் மற்றும் சிவக்குமார் இணைந்து நடித்த முதல் படமாகும். 1967 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்ஜிஆர் அண்ணனாகவும் சிவகுமார் அவரின் தம்பியாகவும் நடித்திருந்தார். சிவக்குமார் இந்த படத்திற்காக முதலில் வந்தபோது அவருடைய உயரத்தை எம்ஜிஆர் கலந்துள்ளார். பொதுவாகவே தன்னுடைய படங்களில் நடிக்கக்கூடிய நடிகர்கள் குறித்த முழு விவரங்களையும் எம்ஜிஆர் அறிந்து கொண்டு தான் வாய்ப்பு கொடுப்பார்.

அதன்படி சிவகுமாருக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்த போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது முதலில் உயரத்தை அளந்த எம்ஜிஆர் இந்த படத்தில் 3 7 மற்றும் 93 வது காட்சியில் நீங்கள் செருப்பு அணிந்து கொண்டு நடியுங்கள். மற்ற காட்சிகளில் ஷூ அணிந்து கொண்டு நடிக்கலாம் என கூறியுள்ளார். சிவக்குமார் மற்றும் எம்ஜிஆர் இருவரும் ஒரே உயரம் கொண்டவர்கள் என்பதால் இருவரும் அண்ணன் தம்பியாக நடிப்பதால் ஒரே காட்சியில் தோன்றும் போது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் இவ்வாறு கூறியுள்ளார்.
