குரு அப்படிங்கிறவங்க யார் தெரியுமா…?என்னங்க இது… ஓபனாக பேசிய செல்வராகவன்…

By admin on புரட்டாதி 11, 2024

Spread the love

செல்வராகவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைப்பட எழுத்தாளர் மற்றும் நடிகராவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் செல்வராகவன். இவர் இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்களின் மூத்த மகனும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அவர்களின் மூத்த சகோதரரும் ஆவார்.

   

2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக 2004 ஆம் ஆண்டு 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற நல்ல கதையம்சம் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

   

சமீபத்தில் மகாவிஷ்ணு என்ற ஒரு நபர் பள்ளியில் சர்ச்சையான விஷயங்களை பேசி பல வழக்குகளில் சிக்கியிருக்கிறார். இது சம்பந்தமாக இன்று செல்வராகவன் ஓபனாக சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

 

அது என்னவென்றால் குரு என்பது யார். யாராவது ஒருத்தர் நான் தான் குரு அப்படின்னு சொல்லிக்கிட்டு மைக்கை மாட்டிட்டு வந்து உட்கார்ந்தா உடனே நீங்களும் பின்னாடியே போயிடுவீங்களா. என்னங்க இது. நமக்கு எல்லா விதத்திலும் ரொம்ப ஈஸியான கிடைக்கிற விஷயம் தியானம். உலகத்துல எல்லா மதமும் தியானம் பண்ண தான் சொல்லுது.

ஒரு குருவா இருக்குறவங்க நான்தான் குரு நான்தான் குருன்னு சொல்ல மாட்டாங்க. அவங்க முதல்ல தங்களை வெளிக்காட்டவே மாட்டாங்க. கடவுள் உங்களுக்குள்ள தான் இருக்காரு. இதைத்தான் எல்லா மதமும் கூறுகிறது. இதற்கு ஏதேனும் ஆட்சேபனம் இருந்தால் என்ன ஏன்னு கேளுங்க. உங்களுக்குள்ள இருக்கிற கடவுளை நீங்க தேடுங்க. தியானம் பண்றது மூலமா கண்டுபிடிங்க. அதை விட்டுட்டு யாரோ ஒருத்தங்க வந்து சொல்றாங்கன்னு அவங்க பின்னாடி கண்மூடித்தனமாக போகாதீங்க என்று ஓபனாக பேசியிருக்கிறார் செல்வராகவன்.