என் வாழ்க்கையில இவங்க தான் பூங்கொடி டீச்சர்.. மனம் திறந்த இயக்குனர் மாரி செல்வராஜ்..!

By Nanthini on புரட்டாதி 11, 2024

Spread the love

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் தான் வாழை. சிறிய பட்ஜெட்டில் இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொன் வே ல் மற்றும் ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரை உலகின் பிரபல இயக்குனர்கள் மட்டும் நடிகர்கள் என பலரும் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டினர். மக்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

   

திரைக்கதை முதல் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் வரை ஒட்டுமொத்த படமும் மக்களின் உச்சகட்ட ஆதரவை பெற்று வருகின்றது. இந்த படம் தான் இயக்குனர் மாறி செல்வராஜின் முதல் படமாக வெளிவந்திருக்க வேண்டுமாம். இந்த திரைப்படத்தின் கதையை தான் முதன் முதலில் அவர் துணை இயக்குனராக இருந்தபோது எழுதியுள்ளார். தனது சிறுவயதில் அனுபவித்த வழிகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். அந்த வலிகளை திரையின் மூலம் படம் பார்ப்பவர்களுக்கும் கடத்தினார். குறிப்பாக படத்தில் கிளைமாக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் கலங்க வைத்தது.

   

 

இந்த நிலையில் மாரி செல்வராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உங்க வாழ்க்கையில் வாழை திரைப்படத்தில் வருவது போல யாராவது பூங்கொடி டீச்சர் இருக்காங்களா அவங்க யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மாரி செல்வராஜ், என் வாழ்க்கையில் எனக்கு உதவிய ஒவ்வொருவருமே பூங்கொடி டீச்சர் தான். இசக்கி அம்மாள் என்ற ஆசிரியர் இன்னும் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு தொடரில் கூட அவரைப் பற்றி நான் எழுதி இருந்தேன். முத்துலட்சுமி, காளியம்மாள், பத்மா என நிறைய ஆசிரியர்கள் என் வாழ்வில் பூங்கொடி டீச்சராக இருந்துள்ளனர்.

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் முழுக்க முழுக்க ஆசிரியர்கள் உதவியால் தான் படித்து முடித்தேன். ஒன்றாம் வகுப்பு முதல் லா காலேஜ் படித்து முடிக்கும் வரை நிறைய ஆசிரியர்கள் எனக்கு உதவி செய்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால் உரிமையாக சில ஆசிரியர்களிடம் சென்று எனக்கு பீஸ் கட்ட படம் வேண்டும் என்று கேட்டு வாங்கியுள்ளேன். அந்த அளவிற்கு ஆசிரியர்கள் என் வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் நான் வளர எனக்கு உறுதுணையாக இருந்து பல உதவிகளை செய்துள்ளனர். நான் ஒவ்வொருவரையுமே பூங்கொடி டீச்சராக தான் பார்க்கிறேன் என மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.