இனிமே நீ என் படத்துல எப்பவுமே நடிக்க முடியாது… கடுப்பாகிக் கத்திய மணிரத்னம்… அப்படி என்ன பண்ணினார் ஸ்ரீகாந்த்?

By vinoth on புரட்டாதி 10, 2024

Spread the love

தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.

ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை.  அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

   

எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார். இப்போது தனக்கான இடத்துக்காக அவர் போராடி வருகிறார்.

   

இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கையில் தான் எடுத்த சில தவறான முடிவுகளால் திரைவாழ்க்கை அதலபாதாளத்துக்கு சென்றது பற்றி பேசியுள்ளார். அதில் “ஆயுத எழுத்து படத்துக்காக நான் தேர்வு செய்யப்பட்டேன். சித்தார்த் வேடத்தில் நான்தான் நடிக்க இருந்தது. ஆனால் நான் அப்போது வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தயாரிப்பாளர் என் படத்தை முடித்துவிட்டுதான் அந்த படத்துக்குப் போகணும் என மிரட்டினார்.

 

என்னால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. இதை நான் மணிரத்னம் சாரிடம் சொன்னபோது இத்தனை நாட்களாக எனக்குக் காத்திருந்த அவருக்கு கோபமாகிவிட்டது. இனிமேல் எப்போதுமே நீ என் படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டார். நான் என்ன பண்ணுவது, என் சூழ்நிலை அப்படி. ஆயுத எழுத்து படம் மட்டும் இல்லை. நான் மிஸ் பண்ணிய படங்களில் டிஷ்யும், எம் குமரன், நான் கடவுள் என சில ஹிட் படங்களும் அடக்கம்.” எனக் கூறியுள்ளார்.