“நாளைக்கு இருப்போமானு தெரியாது”.. விபத்தில் சிக்கிய ராஷ்மிகா.. அவரே போட்ட உருக்கமான பதிவு..!

By Nanthini on புரட்டாதி 10, 2024

Spread the love

இந்திய திரை உலகின் நேஷனல் கிரஷ் என்ற பட்டத்தோடு வளம் வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. தனது இளம் வயதில் வாடகை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த ஒரு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் இவரின் தந்தை மிகப்பெரிய தேயிலைத் தோட்ட முதலாளியாக மாறினார். பெங்களூரில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் மாடலிங் துறையில் களமிறங்கினார்.அதன் பின்னர் தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயணித்து வரும் ராஷ்மிகா கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

   

தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ராஸ்மிகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கு வயது 28.தற்போது தமிழில் முன்னணி நடிகையாகவும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாகவும் நடித்து வருகிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

   

 

இந்நிலையில் ராஷ்மிகா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்த நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் தற்போது குணமாகியுள்ளார். அது குறித்து அவர் உருக்கமாக ஒரு பதிவையும் பகிர்ந்து உள்ளார். அதில், நாளைக்கு இருப்போமான்னு தெரியாது, அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள் என்று அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rashmika Mandanna இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rashmika_mandanna)