திரையுலகை பொருத்தவரை தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிகழ்வுகிறது. நடிகர்கள் முறையாக கால்ஷீட் கொடுக்காததால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். இந்த பிரச்சனை ஏற்கனவே பூதாகரமாக வெடித்தது. மேலும் கேரளா சினிமாவில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பது தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அறிக்கை வெளியானதில் இருந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தமிழ் திரையுலகிலும் சில நடிகைகள் அந்த பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். அதற்கு தீர்வு காணும் பொருட்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது . இந்த நிலையில் காமெடி நடிகரான மனோகர் கூறியதாவது, எல்லாம் மீடியாக்களுக்கும் வணக்கம். நலிந்த கலைஞர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குன்னு கேட்டாங்க.

நலிந்த கலைஞர்களில் என்னைத்தான் சேர்க்கணும். நான் வீட்டில் இருந்து ஒரு 12 கிலோமீட்டர் மெதுவா நடந்து நடிகர் சங்கத்துக்கு வந்து சேர்ந்திடுவேன். நாங்க ஒரு அடைக்கலத்துக்காக நடிகர் சங்கத்தை தேடி வந்திருக்கோம். தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்த நடிகர் சங்கத்திடம் பேச இப்போ நேரம் இல்லை. ஒரு சில பிரச்சினைகள் பற்றி நடிகர் சங்கத்தில் முறையிடலாம். ஆனால் அது நடைபெறாத நிலைமையில தான் இருக்கு. ரிஷி ராஜ் அப்படிங்குற புரொடியூசர் எனக்கு 10 லட்ச ரூபாய் பணம் தரணும்.

அதுக்காக நான் நடிகர் சங்கத்து கிட்ட போய் கேட்டேன். ஆனா அந்த பணம் திரும்ப கிடைக்கல. நீதிமன்றத்துக்கு போனேன். ஒரு 3,4 வருஷம் போச்சு. அந்த பணம் கிடைக்கல. இதுவரை பொடி நடையா வடபழனிக்கும் வீட்டுக்கும் நடந்துகிட்டு இருக்கேன். ஆனா அவன் நல்ல மோட்டார் சைக்கிள்ல வந்து இறங்குறான். சுத்துறான், போறான். என் நண்பர்கள் பார்த்துகிட்டு சொல்றாங்க. போலீஸ் ஸ்டேஷன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கல. எனக்கு கண் ஆப்ரேஷன் பண்ணனும். என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்தா அத நான் பாத்துக்கிடுவேன் என பேசியுள்ளார்.

