‘நந்தன்’ படத்தில் சசிகுமார் ரோலில் நடிக்க இருந்தது இவர்தான்… மனம்திறந்த இயக்குனர் சரவணன்…

By admin on புரட்டாதி 8, 2024

Spread the love

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். தனது 20 வயது முதலே சினிமாவில் பணியாற்ற தொடங்கியவர் சசிகுமார். பாலாவின் சேது திரைப்படத்தில் உதவி இயக்குனராக சசிகுமார் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கி நடித்த திரைப்படம் சுப்பிரமணியபுரம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் சிறந்த படத்திற்கான விருது, விஜய் விருது ஆகியவற்றை வென்றது. முதல் படத்தின் மூலமாகவே பிரபலம் அடைந்தார் சசிகுமார். அடுத்ததாக 2009 ஆம் ஆண்டு இவர் நடித்த நாடோடிகள் திரைப்படமும் வெற்றி அடைந்தது.

   

தொடர்ந்து போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் போன்ற வெற்றி படங்களில் நடித்தார் சசிகுமார். இவர் படங்கள் என்றாலே குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். அந்த அளவு குடும்பப் பாங்கான கதை அம்சம் சென்டிமென்ட் போன்றவைகள் இவரது படங்களில் அதிகமாக இருக்கும்.

 

சமீபத்தில் நடிகர் சூரி நடித்திருந்த கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சசிகுமார். அதை தொடர்ந்து இரா சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சசிகுமார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நந்தன் திரைப்படத்தை இயக்கிய இரா சரவணன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது இந்த படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறோம். முதலில் நந்தன் திரைப்பட கதையை சூரி அவர்களுக்காகத்தான் எழுதினோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது அவர் விடுதலை படத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து அதில் நடித்துக் கொண்டிருந்ததால் பின்னர் இந்த கதைக்கு சசிகுமார் அவர்களை தேர்வு செய்தோம் என்று கூறியிருக்கிறார்.