GOAT படத்தில் நடிக்க மீனாட்சி சவுத்ரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

By admin on புரட்டாதி 8, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர்.

   

 

அது மட்டுமில்லாமல் திரிஷா விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் கேமயோ ரோலில் நடித்துள்ளார். கோட் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பட்ஜெட் 400 கோடி.

உலகளவில் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு மட்டுமே 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கோட் படத்தில் நடிக்க மீனாட்சி சவுத்திரி 40 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இவர் விஜய் ஆண்டனியின் கொலை, ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி, திரைச்செய்தி - தமிழ் முரசு  Cinema/Movie news in Tamil, Tamil Murasu