பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது மகன் செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

இன்னொரு மகன் தனுஷ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. முதலில் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த கஸ்தூரிராஜா இப்போது சென்னையில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பொறி, சீடன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குனர் சுப்பிரமணியன் சிவா கஸ்தூரிராஜா பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அவர் கூறியதாவது கஸ்தூரிராஜா சார் என்கிட்ட சொல்லும் போது 50 ரூபா எடுத்துக்கிட்டு கருப்பசாமி கோயில்ல உட்கார்ந்துகிட்டு என்னதான் பண்ண போறோம்னு யோசிச்சுகிட்டு இருந்தாராம். அப்போது அவர் மனசுல மெட்ராசுக்கு போனும் அப்படிங்கற எண்ணம் உதிச்சிருக்கு. மெட்ராஸ் வந்து என்ன பண்றது? உடனே மதுரையில் இருக்கிற ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் அவங்ககிட்ட 50 ரூபா வாங்கிகிட்டு ஒரு சுண்டல் விற்று பொழச்சிக்கலாம்னு சென்னைக்கு வந்து இருக்காரு.
மெரினா பீச்ல சுண்டல் விற்று பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்திருக்காரு. ஆனா அவருக்கு இயற்கையும் கடவுளும் எவ்வளவு பெரிய வாழ்க்கையே தந்து இருக்கு. சாதாரண மனிதனா சென்னைக்கு வந்து இறங்கும்போது என்ன பண்ண போறோம்னு தெரியாது. ஆனா அவங்க பசங்க செல்வராகவனும், தனுஷும் என்னாலாமோ பண்ணிட்டாங்க. அப்போ கஸ்தூரிராஜா மனசுல மாபெரும் நம்பிக்கை இருந்திருக்கு. பிறக்கும்போதே அப்பா சேர்த்து வச்ச சொத்துல யாரும் வரல அவங்களே முன்னேறி வந்திருக்காங்க என சுப்பிரண்மணியன் கூறியுள்ளார்.

