ஒரு பொய்யால் வாழ்க்கையை இழந்த மோகன்… பதிலாக அவர் என்ன செய்தார் தெரியுமா…?

By admin on புரட்டாதி 2, 2024

Spread the love

நடிகர் மோகன் கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் பிறந்தவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் திரைப்படங்களின் மூலமாக மிகவும் பிரபலமானவர் மோகன். 1980களில் புகழின் உச்சியில் இருந்தார் மோகன். ரஜினி மற்றும் கமல் அவர்களுக்கு இணையாக போற்றப்பட்டவர். கமலுக்கு அடுத்ததாக காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர் மோகன்.

   

ஆரம்பத்தில் மோகன் அவர்களை ஒரு உணவகத்தில் சந்தித்த பிவி கரந்த் என்பவர் நாடகத்தில் நடிக்க வைத்தார். பின்னர் இயக்குனர் பாலு மகேந்திரா கன்னடத்தில் கோகிலா திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார். 1980ல் மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மோகன். 1980களில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் தான். அதனால் இவரை வெள்ளிவிழா நாயகன் என்று மக்கள் அழைத்தனர்.

   

கிழக்கே போகும் ரயில், நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, இரட்டைவால் குருவி, விதி, நூறாவது நாள், சகாதேவன் மகாதேவன், மௌன ராகம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து உச்சத்தை அடைந்தவர் மோகன். இவர் பெரும்பாலும் மேடை பாடகராக நடித்ததால் இவரை மைக் மோகன் என்றும் கூறுவர்.

 

மேடைகளில் பாடும் கதாபாக்கத்தில் பெரும்பாலும் நடித்திருந்தாலும் இவரது முக பாவனை மற்றும் நடிப்பு எஸ்பிபியின் குரல் இவரது நடிப்பிற்கு கச்சிதமாக பொருந்தும். அதனால் பெரும்பாலான மக்கள் இவர் படத்தில் வரும் பாடலை இவரே தான் பாடி இருப்பார் என்று நம்பினர். அதற்கு பிறகு தான் எஸ்பிபி பாடியிருப்பார் என்பதே தெரியவந்தது. அந்த அளவுக்கு இவரின் நடிப்பும் தத்ரூபமாக இருக்கும்.

அதேபோல் காதல் மன்னனாக இருந்த மோகனுடன் நடிப்பதற்கு அனைத்து நடிகைகளும் விரும்புவர். பெரும்பாலான நடிகைகள் இவர் மீது காதல் வயப்பட்டு இருக்கின்றனர். அப்படி ஒரு பிரபல நடிகை மோகன் மீது காதல் வயப்பட்டு இருக்கிறார். ஆனால் எல்லா நடிகைகளின் காதல்களையும் மரியாதையாகவே நிராகரித்து இருக்கிறார் மோகன். அப்படி இந்த நடிகையும் நிராகரிக்கவே கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த பிரபல நடிகை மோகனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்ற பொய்யான தகவலை பரப்பி இருக்கிறார். சமூக ஊடகங்கள் இல்லாத அந்த காலத்தில் இந்த செய்தி தீயாய் பரவியது.

அதற்குப் பிறகு மோகன் அவர்களுக்கு எந்த பட வாய்ப்பு வரவில்லை. எந்த நடிகையும் அவருடன் நடிக்க விரும்பவில்லை. அதோடு தமிழ் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டு தனது சொந்த ஊரான கர்நாடகாவுக்கே சென்றுவிட்டார் மோகன். தற்போது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த வருடம் தான் ஹரா என்ற திரைப்படத்தின் மூலம் வெளியே வந்து மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் மோகன். அப்படி பொய்யான தகவலை பரப்பிய அந்த நடிகையானாலும் சரி பத்திரிகை ஆனாலும் சரி அவர்களுக்கு மோகன் கொடுத்த ஒரே பதிலடி மவுனம் தான். அவர் யாரையும் எதிர்த்து பேசவும் இல்லை குரல் கொடுக்கவும் இல்லை அமைதியாக இருந்தே அவர்கள் கூறியது பொய் தனது பதிலை கூறியிருக்கிறார் மோகன்.