தமிழ் சினிமாவில் படங்கள் தோல்வியடைய.. இவங்க 3 பேர் தான் காரணம்.. அடுத்த பரபரப்பை கிளப்பிய எழுத்தாளர் சோ.தர்மன்..!

By Nanthini on ஆவணி 30, 2024

Spread the love

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை ஒட்டி இருப்பதாகவும் நாங்கள் அச்சு ஊடகத்தில் பேசியதை மாறி செல்வராஜ் சினிமா ஊடகத்தில் பேசியுள்ளார் என்றும் பிரபல எழுத்தாளர் சோ தர்மன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு புதிய பரபரப்பை கிளப்பினார். இதனைத் தொடர்ந்து தர்மனின் கதையை திருடிதான் மாரி செல்வராஜ் வாழை திரைப்படமாக எடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

   

பலரும் மாரி செல்வராஜை விமர்சித்து பதிவுகளை எழுதி வந்த நிலையில், மாரி செல்வராஜ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அதற்கு பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் எழுத்தாளர் சோ.தர்மன் தற்போது மீண்டும் ஒரு தகவலை வெளியிட்ட புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சினிமாவை பொறுத்தவரை மக்கள் நல்ல கதையை தான் எதிர்பார்க்கிறார்கள். வாழை போன்ற திரைப்படத்தில் அது உள்ளது. இதனை மக்கள் விரும்புகின்றனர்.

   

 

ஆனால் தமிழ் சினிமாவை பொருத்தவரையில் மூன்று நடிகர்களால் படங்கள் தோல்வியடைகின்றன என கூறியுள்ளார். அதாவது ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகிய நடிகர்களுக்கு ஏற்றது போல இயக்குனர்கள் கதையை அமைக்கின்றன. அதிலும் படத்தில் லவ் சீன், சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இரண்டு முத்த காட்சிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றது போல இடங்களும் தேர்வு செய்யப்பட்டு படங்கள் எடுக்கப்படுகிறது. இதனாலையே தமிழ் சினிமாவில் படங்கள் தோல்வியடைகின்றன என அவர் கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.