ஒரு டம்ளருடன் மசாலா… பெண்கள் மனதில் இடம் பிடித்த ஆச்சி மசாலாவின் வரலாறு தெரியுமா…?

By admin on ஆவணி 30, 2024

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள நாசரேத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் ஆச்சி குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக். அவருக்கு 12 வயதாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். ஆறு குழந்தைகளுடன் ஒருவராக தனது தாயினால் வறுமையில் வளர்க்கப்பட்டார் பத்மசிங் ஐசக்.

   

அந்த காலத்தில் எப்பொழுதும் தனது தாய் உடன் எல்லா வேலைகளிலும் உதவிகரமாக இருப்பவர் ஐசக். அவர் சமைக்கும்போது கடினமாக மசாலாக்களை அரைத்து சமைப்பதை பார்த்து வளர்ந்திருக்கிறார். அவரது அம்மாவின் சமையல் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் தயார் செய்யும் மசாலா வகைகளை அவர் எப்போதும் விரும்புவார். பின்னர் அவர் தனது மனைவியுடன் இணைந்து மசாலா கலவையின் செய்முறையை கற்று அனைத்து பெண்களுக்கும் சமையலை ரெடிமேட் மசாலா மூலம் எளிதாக்க வேண்டும் என்ற கனவோடு மசாலா தொழிலை தொடங்கினார் பத்மசிங் ஐசக். அதற்கு தென் மாவட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆச்சி என்ற பெயரை வைத்து ஆச்சி குழுமம் மசாலா தொடங்கியது.

   

ஆரம்பத்தில் திருவிழாக்களில் தனது மசாலா விற்பனையை செய்து வந்தார் பத்மசிங் ஐசக். பின்னர் ஒவ்வொரு மசாலா பாக்கெட்டுக்கும் ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்பளர் இலவசம் என்ற விளம்பரத்தை செய்து தனது மசாலா தொழிலை படிப்படியாக உயர்த்தினார் பத்மசிங் ஐசக். மேலும் ஆச்சிக்குழுமம் அது தயாரிப்புகளில் தரம் மற்றும் மலிவு விலையில் வழங்குவதை கவனம் செலுத்தியது. தரம் மற்றும் மலிவு விலை ஆகிய இரண்டே எங்கள் நிறுவனத்தின் இரண்டு தூண்கள் என்று பத்மசிங் ஐசக் பல நேர்காணங்களில் கூறுவார்.

 

விரைவில் ஆச்சி நிறுவனத்தின் பல வகையான மசாலாக்கள் பெண்களிடையே பிரபலம் அடைய தொடங்கியது. இன்று அனைத்து வீடுகளிலும் ஆச்சி மசாலாவின் ஏதாவது ஒரு பொருள் கண்டிப்பாக இருக்கும். அது சாம்பார் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, பிரியாணி மசாலா போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தற்போது 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆச்சி மசாலா தங்களது விற்பனையை விரிவுபடுத்தி உள்ளது. இந்தியாவிலேயே அதிநவீன தொழில்நுட்பமான குளிர் அரைக்கும் தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியது ஆச்சி நிறுவனம் தான். ஏனென்றால் அரைக்கும் போது நறுமணம் நிறம் போன்றவைகள் ஆவியாகவதை தடுப்பதற்கு குளிர்ந்த முறையில் அரைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததாக பத்மசிங் ஐசக் கூறியிருக்கிறார்.

தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் ஆச்சி முக்கியமான மசாலாவாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஆச்சி மசாலா போட்டாலே அந்த சமையல் நல்ல மணமுடனும் சுவையுடனும் இருக்கிறது என்று பெண்கள் சொல்லுகின்றனர். ஒரு வீட்டு சமையலறையில் ஆரம்பித்த இந்த ஆச்சி நிறுவனம் தற்போது 2000 கோடிக்கு மேல் டேரன்ஓவர் செய்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.