பாவம் பார்த்து அவரை கல்யாணம் பண்ணினேன்.. எங்க அம்மா OK சொன்னதுக்கு காரணம்.. கணவர் பற்றி ஜாலியாக பேசிய அர்ச்சனா..!!

By admin on ஆவணி 29, 2024

Spread the love

பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா கடந்த 1999-ஆம் ஆண்டு ஜெயா டிவியில் தனது பயணத்தை தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அர்ச்சனா பிரபலமானார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தனது பயணத்தை தொடங்கி பல முன்னணி சின்னத்திரை சேனல்களில் தொகுப்பாளியாக வேலை பார்த்தார். இன்றளவும் கனவுகளோடு வலம் வரும் பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார் அர்ச்சனா.

   

அவரது மகள் சாரா வினித்தும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் அர்ச்சனா கலந்து கொண்டார். அப்போது சித்ரா லட்சுமணன் உங்களுடையது காதல் திருமணமா? என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அர்ச்சனா ஆமாம் சார். அவர் காதலிச்சாரு. நான் பாவம் பார்த்து ஒத்துக்கிட்டேன். அவர் என்ன ஒருதடவை தான் பார்த்தாரு.

   

 

அக்டோபர் 28ஆம் தேதி வீட்டுக்கு வந்தாரு. அவரோட தம்பியும் நானும் ரொம்ப வருஷமா நண்பர்கள். என்ன பார்த்ததுக்காக அவர் தம்பி வந்து இருந்தாரு. வரும்போது என் கணவரையும் கூட்டிட்டு வந்தாரு. இவரு டிபென்சில வேலை பார்க்கிறார். அவருக்கு பஜ்ஜி, போண்டா, காபி எல்லாம் சாப்பிட கிடைக்கிறது இல்ல. எங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க. என் கணவருக்கு பஜ்ஜி போண்டா கொடுத்தாங்க. அவரு சாப்பிட்டு பார்த்துட்டு இந்த வீட்ல நல்ல சமைக்கிறார்கள். இந்த வீட்டு பொண்ணு நல்லா சமைக்கும் போல இருக்கு அப்படின்னு நினைச்சுட்டாரு.

அது மட்டும் இல்லாம எங்க அம்மா கிட்ட சேலரி சர்டிபிகெட்ட கொடுத்துட்டாரு. எங்க அம்மாவுக்கு அப்போ கவர்மெண்ட் மாப்பிள்ளை அப்படிங்குறது ரொம்ப பெரிய விஷயம். மாப்பிள்ளை ஆர்மி. இந்த மாதிரி கிடைக்குமா. அவரை கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொன்னாங்க. பாட்டி வீட்ல இருந்த எல்லாரும் இதுதான் கரெக்டான டைம் நீ கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொன்னாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். நல்ல பையன் இவருக்கு வாழ்க்கை கொடுக்கலாம் அப்படின்னு நினைச்சேன். பாவப்பட்டு பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுத்துட்டேன் என கணவர் பற்றி ஜாலியாக பேசியுள்ளார்.