உதவி இயக்குனரான மாரி செல்வராஜை தன் படத்தில் நடிக்க வைத்த ராம்.. இதை யாராவது கவனிச்சீங்களா..?

By Nanthini on ஆவணி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளன. குறிப்பாக தேசிய விருது பெற்ற பரியேறும் பெருமாள், தனுஷின் கர்ணன், மாமனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுதலை பெற்றன. இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வாழை.

   

 

   

இந்த திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கும் படம் பைசன். சொல்ல வந்த கருத்தை துணிச்சலாக சொல்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சொல்ல வந்த கருத்தை துணிச்சலாக சொல்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தான் இயக்கும் படங்களில் அழகாக கடத்துவதில் இவர் சிறந்தவர். ஏனென்றால் தனது வாழ்க்கையில் இவர் ஆரம்பத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார்.

 

ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் வந்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கிய ஜீவா நடித்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் கூட இவர் ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார். அதனைப் போலவே தங்க மீன்கள் மற்றும் தரமணி ஆகிய திரைப்படங்களிலும் இவர் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். தற்போது கற்றது தமிழ் திரைப்படத்தில் மாரி செல்வராஜ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

cinema lover இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cinema_lover_7)