எம் ஆர் ராதா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?… பகுத்தறிவாக யோசிக்காமல் எமோஷனலாக செய்த அந்த ஒரு விஷயம்!

By vinoth on ஆவணி 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.

   

எம் ஆர் ராதா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாத்திகராக வாழ்ந்தார். பெரியார் சீடனாக வாழ்ந்த அவர் வைதீக சடங்குகளை எள்ளி நகையாடும் விதமாக நடித்திருப்பார். கடவுள் பக்தராக கூட சில படங்களில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பில் ஒரு சிறு எள்ளல் தொனி இருக்கும்.

   

இத்தகைய எம் ஆர் ராதா தன் வாழ்க்கையில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பகுத்தறிவு வாதியாக நடந்துகொள்ளாமல், மிகவும் எமோஷனலாக ஒரு முடிவை எடுத்துள்ளார். எம் ஆர் ராதா நாடக உலகில் கொடிகட்டி பறந்த போது அவருக்கு ஜோடியாக நடித்த பிரேமாவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு தமிழரசன் எனப் பெயர்வைத்துள்ளார்.

 

ஆனால் அடுத்தடுத்து இருவரும் நோய்வாய்ப் பட்டு இறந்துள்ளனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத எம் ஆர் ராதா, அவர்கள் இருவருக்கும் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஸ்தூபி ஒன்றை எழுப்பி அவர்களை வழிபட்டு வந்துள்ளார். அந்த அளவுக்கு அவர்களின் இழப்பு ராதாவை வெகுவாகப் பாதித்துள்ளது.