ஆம்ஸ்ட்ராங் வழக்கில்.. நெல்சன் மனைவியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!!

By admin on ஆவணி 20, 2024

Spread the love

ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 11 பேர் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆஜரான அவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தி திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சியை சேர்ந்த முக்கிய பிரபலங்களை கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

   

இதுவரை இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். முதலில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்பவரை என்கவுண்டரில் போலீசார் சுட்டு கொலை செய்துவிட்டனர். பின்னர் கொலை செய்ய சிறையில் இருந்தே திட்டம் போட்டுக் கொடுத்த பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 10 நாட்களாக நோட்டம் நரம்பிலேயே வெட்ட திட்டம் திடுக்கிடும் தகவல்கள் | plan of the mob in the Armstrong murder case is revealed

 

இந்த கொலை வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளி சம்போ செந்தில் என்பவர். அவரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் என போலீசார் திட்டமிட்டனர். ஆனால் முன்னதாக மொட்டை கிருஷ்ணன் யாரிடமெல்லாம் செல்போனில் பேசினார் என்ற தகவலை போலீசார் சேகரித்தனர்.

இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸ் விசாரணை!! இதுதான் காரணம்.. - விடுப்பு.கொம்

அப்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் மொட்டை கிருஷ்ணன் பேசியதாக தெரிகிறது. குற்றவாளி மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக நெல்சனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jailer Director Nelson Dilipkumar Birthday Special: His Wife Monisha Shares Beautiful Family PIC On Instagram! - Filmibeat