பிரபல காமெடி நடிகரான மயில்சாமி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். நான் அவன் இல்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் மயில்சாமிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து மயில்சாமி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மயில்சாமி உயிரிழந்தார். சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய மயில்சாமிக்கு யுவன் மயில்சாமி என்ற ஒரு மகன் உள்ளார். இவர் சின்னத்திரை சீரியலில் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

விஜய் டிவியில் தங்கமகள் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. இப்போது வரை ரசிகர்களிடையே தங்கமகள் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஹீரோவாக மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி தான் நடிக்கிறார். அஸ்வினி ஹீரோயினாக நடிக்கிறார். இது மட்டுமில்லாமல் தலைவாசல் விஜய், கார்த்திகேயன், காயத்ரி, ஜெயராமன், அஜய் ரத்தினம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் யுவன் மயில்சாமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலில் நடிக்க இருக்கிறார். அது ஆஹா கல்யாணம் சீரியல் தான் அந்த சீரியலில் யுவன் மயில்சாமி க்ரிஷ் என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யுவன் மயில்சாமி கேமியா ரோலில் என்ட்ரி கொடுக்கிறாரா? அல்லது நீண்ட நாள் ஓடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

