மறுபடியுமா..? ஆல்யா மானசா கைக்கு என்ன ஆச்சு.. அவரே வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By admin on ஆவணி 20, 2024

Spread the love

பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். இந்த சீரியல் ஆல்யா மானசாவை பிரபலமாக்கியது. சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை ஆல்யா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் தான் ஆல்யா சஞ்சீவ் தம்பதியினர் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் தங்களுக்கான கனவு இல்லத்தை கட்டி முடித்தனர். சீரியலில் நடிக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்றுவரை இணைபிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

 

அவருக்கு ஜோடியாக ரிஷி நடிக்கிறார். இனியா சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சஞ்சீவ் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடிக்கும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஆர்யா மானசாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் பல மாதங்கள் ஓய்வெடுத்து பின் குணமாகி வந்தார்.

இந்த நிலையில் ஆல்யா மானசா கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் கையில் கட்டு போட்டு உள்ளார். ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு மறுபடியுமா என வருத்தமாக குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மறுபடியும் என்ன ஆச்சு? விரைவில் குணமாக வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)