தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் புகழ்பெற்ற நடிகராகவும் இருந்தவர் MGR. அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தவர் எம் ஆர் ராதா. சமுதாயத்திற்கு ஏற்ற கருத்துக்களை தனது நகைச்சுவையான பேச்சுகளின் மூலம் எடுத்துக்காட்டியவர் MR ராதா.
MGRரும் எம் ஆர் ராதாவும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். அப்படி இவர்கள் நடித்த திரைப்படங்களில் ஒன்று 1964 ஆம் ஆண்டு வெளியான தொழிலாளி. இந்தத் திரைப்படத்தை எம்.ஏ ஆறுமுகம் இயக்கியுள்ளார். தேவர் பிலிம்ஸ் எம் எம் ஏ சின்னப்ப தேவர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

#image_title
இந்த திரைப்படத்தில் MGR உடன் இணைந்து எம் ஆர் ராதா, கே ஆர் விஜயா, நாகேஷ், மனோரமா, எம் என் நம்பியார், எஸ் ஏ அசோகன், புதுமுகம் ரத்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எம்ஜிஆர் திராவிட கட்சியில் சேர்ந்து மக்களுக்காக பணியாற்றி வந்தார் என்பது நாம் அறிந்த விஷயம் தான். அது சம்பந்தமாக இந்த படத்தில் ஷூட்டிங் போது எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவுக்கும் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்று இனி காண்போம்.
தொழிலாளி திரைப்படத்தில் ஆரூர் தாஸ் வசனம் எழுதி இருப்பார். அப்படி ஒரு காட்சி படமாக்கப்படுவதற்கு எம்ஜிஆர், எம் ஆர் ராதாவை பார்த்து ஒரு வசனம் கூறுவதாக எடுக்கப்பட வேண்டிய காட்சி அது. அந்த வசனம் என்னவென்றால் கூட்டுறவு பஸ் சர்வீஸ் தான் நம் வாழ்க்கையை வெளிச்சமாக்க போகும் நம்பிக்கை நட்சத்திரம் என்ற என்ற வசனம் ஆகும். நம்பிக்கை நட்சத்திரம் அந்த நேரத்தில் சுதந்திரக் கட்சியின் சின்னமாக இருந்ததால் எம் ஜி ஆர் அந்த வார்த்தையை மாற்றி எழுதுமாறு கூறினார். உடனே ஆரூர் தாஸ் நம்பிக்கை நட்சத்திரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு உதயசூரியன் என்று எழுதிக் கொடுத்தார்.
அது ஒரு ட்ராலி சாட் காட்சி அப்போது எம்ஜிஆர் வசனம் எம் ஆர் ராதாவை பார்த்து பேசுவது போல் இருக்கும். பட காட்சி எடுப்பதற்கான ஒத்திகை ஆரம்பித்தது. அப்போது இந்த வசனத்தை பேசி முடித்தவுடன் எம் ஆர் ராதா கோபப்பட்டு ராமச்சந்திரா உதயசூரியன் என்றெல்லாம் பேசி என் முன் சீன் காட்டாதே. எனக்கு இந்த வசனம் பிடிக்கவில்லை நம்பிக்கை நட்சத்திரம் என்ற வார்த்தையை அதில் சேர்த்து விடுங்கள் என்று கூறி எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாக்கும் மோதல் தொடங்கியது.

#image_title
உடனே அங்கு சின்னப்ப தேவர் வந்தார். அப்போது தேவரிடம் எம் ஆர் ராதா ராமச்சந்திரன் உதயசூரியன் என்று வசனம் பேசிவிட்டு கடைசியில் இயக்குனர் ஷாட்டை என் முகத்தில் வைக்கணும் என்று சொல்கிறார். எனக்கு அது உடன்பாடு இல்லை ராமச்சந்திரன் என்ன வசனம் என்னால் பேசிக்கொள்ளட்டும் ஆனால் இறுதியில் என் முகத்தை காட்டக்கூடாது என்று கூறினார். தேவர் அனைவரையும் சமாதானப்படுத்தி விட்டு உதயசூரியன் என்ற வார்த்தையை வைத்து ராமச்சந்திரனை வசனத்தை பேச வைத்து அந்த சாட் முடியும்போது எம் ஆர் ராதாவுக்கு பதில் கடவுள் முருகனை காட்டுவதாக பேசி முடிக்கப்பட்டு அப்படியே படமாக்கப்பட்டது. இப்படி தொழிலாளி திரைப்படத்தின் ஷூட்டிங் என்பது பெரும் மோதல் எம்ஜிஆர்ருக்கும் எம் ஆர் ராதாக்கும் உருவாக இருந்தது. சின்னப்ப தேவர் தடுத்து சமாதானமாக முடித்து விட்டார்.
