தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.
அழகான தோற்றம் கொண்ட கார்த்திக் 80 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் கார்த்திக் நிஜ வாழக்கையிலும் ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்துள்ளார். பல நடிகைகளோடு அவருக்கு தற்காலிக காதல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அது சம்மந்தமாக கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பிக் கிளப்பின. அதன் பின்னர் தன்னோடு நடித்த ராகினி மற்றும் அவர் தங்கை ஆகிய இருவரையுமே அவர் திருமணம் செய்துகொண்டார்.
கார்த்திக்கின் திறமைக்கு அவர் இப்போதும் முன்னணி நடிகராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் சில பழக்க வழக்கங்கள்தான் அவரை சினிமாவில் இருந்து வெளியேற்றின. கார்த்திக்கை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள். அப்படி ஒருக் கதையைதான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான எம் பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
அதில் “எங்க அப்பா கார்த்திக், பானுப்ரியாவை வைத்து ‘சக்ரவர்த்தி’ என்ற படத்தை எடுத்தார். அந்த படத்தின் ஷூட்டிங்குக்குக் கார்த்திக் ஒழுங்காக வரவேயில்லை. அப்போது அவர் சில பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தார். அதுபற்றி பேசவேண்டாம். ஷூட்டிங் ஏன் வரவில்லை என்று கேட்டால் வேணுமென்றே மருத்துவமனைக்குப் போய் படுத்துக் கொள்வார். தயாரிப்பாளர் வந்து பார்த்தால் பாவம் என்று சென்றுவிடுவார்களாம்.
அதுபோல எங்கள் படத்தில் ஒரு பாட்டு மட்டும் எடுக்க வேண்டிய நிலையில் காலில் அடிபட்டு விட்டது என்று கட்டுப் போட்டுக்கொண்டு வரமறுத்தார். எப்படியோ அந்த பாடலையும் எடுத்து முடித்தோம். இப்படி கார்த்திக்கால் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் படம் 3 ஆண்டுகள் தாமதமாக வந்து தோல்வி அடைந்தது.” என ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்
