45 வயதை கடந்தும் இன்னும் திருமணமாகாத தமிழ் நடிகைகள்… அடடா இவங்களும் இந்த லிஸ்ட்ல இருக்காங்களா…?

By admin on ஆவணி 19, 2024

Spread the love

சினிமா துறையில் நடிகையாக வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படி நாயகியாக வாய்ப்பு கிடைத்து விட்டால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாலான நடிகைகள் விரும்புவார்கள். திருமணம் செய்து கொண்டால் நமக்கான மார்க்கெட் போய் விடுமோ என்று பல நடிகைகள் திருமணம் செய்ய வயது வந்தும் வேண்டாம் என்று தள்ளி போடுவார்கள். ஒரு சில நடிகைகள் காலம் கடந்து திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டில் ஆனவர்களும் உண்டு. ஆனால் வேறு ஒரு சிலரோ காலம் கடந்து போனதால் திருமணமே செய்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை தனியாகவே வாழ்ந்திருக்கிறவர்களும் உண்டு. அப்படி 45 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை இனி காண்போம்.

#image_title

1. நக்மா
1980, 90 களில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். ரஜினிகாந்த் உடன் பாட்ஷா பிரபுதேவாவுடன் காதலன் ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாத நக்மாவின் வயது 49 ஆகும்.

   
   

2. கனகா
மூத்த மற்றும் பழம்பெரும் நடிகையான தேவிகா மற்றும் தமிழ் சினிமாவின் நடிகர் ஆன தேவதாஸ் ஆகியவருக்கு பிறந்தவர் தான் கனகா. 1989 ஆம் ஆண்டு ராமராஜன் உடன் இணைந்து கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கனகா. அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இவர் பெயரை சூட்டுவர் மக்கள் அந்த அளவுக்கு கனகா புகழின் உச்சியில் இருந்தார். தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களினால் வெகுவிரைவிலேயே சினிமாவை விட்டு விலகிவிட்டார். இவர் ஒரு பொறியாளரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் திருமணமான 15 நாட்களில் இவரை விட்டு விட்டு சென்று விட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் இன்றளவும் 51 வயதாகும் கனகா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

 

#image_title

3. சித்தாரா
சித்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார். 1989 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் அவர்களின் புது புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சித்தாரா. புது புது ராகங்கள், புரியாத புதிர், ஆடி விரதம், மாமியார் வீடு, படையப்பா போன்ற திரைப்படங்களில் நடிகையாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் சித்தாராவிற்கு 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொண்டாமல் சிங்கிளாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

4. தபு
தபு இந்திய திரைப்பட நடிகை மற்றும் ஒரு மாடல் அழகியான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர். 11 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தபு 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் தபு. தற்போது 52 வயதாகும் தபு திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

#image_title

5. ஷோபனா
மலையாள மொழி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சோபனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு கன்னடம் மற்றும் ஆங்கில படங்களில் கிட்டத்தட்ட 230 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர். இவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரும் ஆவார். 1980 90களில் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, எங்கிட்ட மோதாதே போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர். தற்போது 54 வயதாகும் ஷோபனா திருமணம் செய்து கொள்ளவில்லை.

#image_title

6. கோவை சரளா
மனோரமாக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கோவை சரளா. இவர் கிட்டத்தட்ட 750திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இன்றளவும் நகைச்சுவை வேடம் என்றால் அவ்வளவு சிறப்பாக நடிப்பவர் கோவை சரளா. 62 வயதாகவும் கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவே இல்லை. அதற்கு காரணமாக அவர் கூறுவது என்னவென்றால் நான் ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் உள்ளவள். ஆன்மீகத்தில் எனது சிந்தனை சென்றதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவே இல்லை என்று கூறி இருக்கிறார்.